பட்டுக்கோட்டை, அக். 24
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் கடந்த ஆகஸ்ட் 14 ந் தேதி நரியம்பாளையம் தம்பா கார்த்தி என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் பட்டுக்கோட்டை எம்.என் தோட்டம் பகுதியை சேர்ந்த 7 பேரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது 7 பேரும் நிபந்தனை பிணையில் வந்து தினசரி கையெழுத்து போட்டு வருகின்றனர். இந்த 7 பேரும் ஒரே நேரத்தில் ஒன்றாக வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இன்று புதன்கிழமை காலை ஒரு குட்டியானையில் மொத்தமாக வந்து கையெழுத்து போட்டு வீட்டுக்கு திரும்பிய போது எம்.என் தோட்டம் பகுதியில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டை அந்த குட்டியானை மீது அடுத்தடுத்து வீசியதால் அதிகமான புகை வந்த போது பிரகாஷ் (22) என்ற இளைஞர் மட்டும் குதித்துவிட மற்றவர்கள் தப்பிவிட்ட நிலையில் அந்த கும்பல் பிரகாஷை சரமாரியாக வெட்டியதுடன் தலையை துண்டித்து எடுத்துச் சென்று பாளையம் சாலையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.