.

Pages

Saturday, October 20, 2018

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி (படங்கள்)

மதுக்கூர், அக். 20
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) மற்றும் மதுக்கூர் காவல்நிலையம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகில் இன்று (அக் 20) சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் ஜனாப் TAKA முகைதீன் மரைக்காயர் தலைமை வகித்தார். மதுக்கூர் வர்த்தக சங்கம் தலைவர், ஆர் பன்னீர்செல்வம், மதுக்கூர் காவல்துறை உதவி ஆய்வாளர் ஆர். மகேந்திரன், மதுக்கூர் வருவாய் ஆய்வாளர் எஸ். சேக் உமர்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் ஏ.ஆனந்த தாண்டவம் தொடங்கி வைத்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி உரை நிகழ்த்தினார்.

இதையொட்டி, சாலைகளில் சென்ற வாகனங்களின் முகப்பு விளக்குகளில் நடுவே கருப்பு வில்லைகள் ஒட்டப்பட்டன. மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் மற்றும் பிராச்சாரம் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சேக் முகமது ராவுத்தர்ஷா, ரெட் கிராஸ் சொசைட்டி ஒன்றிய தலைவர் எஸ்.எஸ்.பி பார்த்திபன்,ரெட் கிராஸ் சொசைட்டி ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராஜு, வர்த்தக சங்க துணைச் செயலாளர் எம்.எஸ்.எம் அப்துல்லாஹ், மைல்கல் குரூப்ஸ் செயலாளர் எம்.சேக் அஜ்மல் மற்றும் CBD நிர்வாகிகள் ஏ.அஹமது முஸ்தபா, எஸ்.நூர் முஹம்மது, எம்.நஜீப் அகமது, பி.முகமது இம்ரான், எச்.முஹம்மது இப்ராகிம், எம்.ரியாஸ் அகமது, ஏ.யூசுப் கான், எச். இம்தியாஸ் அகமது, எச். அக்பர் மாஹிர், எஸ்.நிசாருதீன், ஏ.அப்துல் மாலிக். அதிராம்ப்பட்டினம் பகுதி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில், CBD ஆலோசகர் எம்.கபார் நன்றி கூறினார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.