அதிரை நியூஸ்: அக்.30
சவுதி அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் இதுவரை 71% வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்
சவுதி அரேபியாவின் அரசுத்துறையில் பணியாற்றி வந்த சுமார் 71% வெளிநாட்டவர்கள் வேலையை இழந்துள்ளனர். இவர்களின் இடத்தில் தகுதியான சவுதியர்களை நியமிக்கும் பணிகளை சவுதியின் குடிமைப்பணி அமைச்சகம் (The Ministry of Civil Services) மேற்கொண்டுள்ளது. எனினும் இன்னும் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் 91% வெளிநாட்டவர்களே பணிபுரிகின்றனர் எனவும் குடிமைப்பணி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருட புள்ளிவிபரப்படி, சவுதி அரசுத்துறைகளில் சவுதி மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1.23 மில்லியன் இவர்களில் சுமார் 60,000 பேர் வெளிநாட்டவர்கள். வெளிநாட்டவர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து அரசு வேலைவாய்ப்புகளில் 0.8% வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
அரசு வேலைவாய்ப்புக்களில் சவுதி பெண்களின் பங்கு 0.4% உயர்ந்துள்ள நிலையில் சவுதி ஆண்களின் வேலைவாய்ப்பு 0.95% குறைந்துள்ளது, அதாவது ஆண்கள் சுமார் 697,000 பேரும் 476,000 பேரும் அரசு ஊழியர்களாக வேலைபார்த்து வருகின்றனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.