.

Pages

Thursday, October 18, 2018

கம்போடியா நாட்டில் குப்பையை பெற்று கல்வியை வழங்கும் 'ரப்பீஷ் மேன்' (படங்கள், வீடியோ)

அதிரை நியூஸ்: அக்.18
குப்பை மனிதன் என்றழைக்கப்படும் அந்த இதயசுத்தியுள்ள அந்த மனிதனின் இயல் பெயர் 'அவூக் வான்டே' (Ouk Vanday) இவர் ஒரு முன்னாள் ஹோட்டல் மேனேஜர். கம்போடியாவும் நம் நாட்டைப் போன்றே பொறுப்பற்ற அரசு மற்றும் மனிதர்களால் குப்பையாய் காட்சியளிக்கும் நாடு என்பதால் ரப்பீஷ் மேன் (Rubbish Man) தன்னுடைய நாடு சுத்தமாக வேண்டும் என கனவு கண்டார். உடனே துடைப்பத்தை எடுத்துக் கொண்டு குப்பை இல்லாத இடங்களில் குப்பையை கொட்டி மீடியாக்களுக்கு போஸ் கொடுக்கவில்லை மாறாக அழகிய மாற்றுவழிகள் குறித்து யோசித்தார்.

கம்போடியாவின் லஷ் நேஷனல் பார்க் (Lush National Park) பகுதியில் குப்பை கழிவுகளிலிருந்து பெறப்பட்ட பொருட்களை கொண்டு ஒரு பாலர் பள்ளிக்கூடத்தை உருவாக்கினார். இந்த பள்ளியில் சேர அனுமதி கட்டணமும், பள்ளிக்கட்டணமும் பணமாக கட்டத் தேவையில்லை மாறாக மாணவர்கள் தங்களால் இயன்றளவு குப்பைகளை கொண்டு வந்து தந்தால் போதுமானது என அறிவித்து நடைமுறைப்படுத்தினார்.

விளைவு, தற்போது இந்த பள்ளியில் சுமார் 65 குழந்தைகள் படிக்கின்றனர். குப்பைகளுக்கு பதிலாக ஏழ்மையான மாணவர்கள் கம்ப்யூட்டர் கல்வி, கணக்கு மற்றும் மொழிப்பாடங்களை கல்வியாக பெற்றனர். பள்ளிக்கூடமும் குப்பைகளால் மறுஉருவாக அழகிய வடிவம் பெற்றது. சுற்றுப்புறமும் குப்பைகள் இன்றி படிப்படியாக தூய்மையடைந்து வருகிறது. சேகரிக்கப்படும் குப்பைகளும் மறுசுழற்சிக்காக அனுப்பப்படுகின்றன. இவரது சிறுமுயற்சி கம்போடியாவில் பலரது கண்களை திறந்துள்ளன.

ஏழ்மையால் ஆரம்பக்கல்வி மறுக்கப்பட்ட மாணவர்களுக்கும் குப்பைகளுக்கு பதிலாக கல்வி கிடைத்தது. தெருவில் சுற்றிக் கொண்டிருந்த, பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பல மாணவர்கள் தாங்கள் மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பப் போவதில்லை என்றும் கல்வியை தொடரப் போவதாகவும் மனமகிழ்வுடன் கூறுகின்றனர். அரசும் மக்களும் இந்த மாற்றுச்சிந்தனை மூலம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை தொடர்ந்து பின்பற்றினால் கம்போடியா நாட்டை நாறடித்த குப்பைகளும் மனக்குப்பைகளும் இனி படிப்படியாக விடைபெறும்.

இந்த நல்ல மாற்றம் நம் நாட்டிற்கும் நமக்கும் தேவையான ஒன்று தான், நம்மில் யார் அந்த ரப்பீஷ் மேன்!



Source: topindinews / arabnews / google etc.
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.