.

Pages

Saturday, October 27, 2018

அதிரையில் TNTJ சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.27
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) அதிராம்பட்டினம் கிளை-1, கிளை-2 சார்பில், இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம், தக்வா பள்ளிவாசல் அருகில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாவட்டம் மற்றும் கிளை 1, 2 நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக அவ்வமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் இ. முகமது, 'தீமையை வேரறுப்போம்' என்ற தலைப்பிலும், அவ்வமைப்பின் மாநிலப் பேச்சாளர் கோவை. ஆர். ரஹ்மத்துல்லா, 'திருக்குர் ஆன் கூறும் சமநீதி' என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்கினர்.

கூட்டத்தில், குடிநீர் தேவைக்காக அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கு ஆற்று நீர் திறந்துவிடக்கோரி, சுமார் 600 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தும், ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விடாத மாவட்ட நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிப்பது எனவும், அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை அதிராம்பட்டினம் கிளை-2 தலைவர் பஜால் முகைதீன் வாசித்தார். கூட்ட முடிவில், கிளை-1 தலைவர் நவாப்ஷா நன்றி கூறினார். இக்கூட்டத்தில், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.