.

Pages

Monday, October 22, 2018

சீனா ~ ஹாங்காங் இடையே உலகின் மிக நீளமான கடல் பாலம் திறப்பு (வீடியோ)

அதிரை நியூஸ்: அக். 22
சீனாவின் ஜூஹாய் நகரையும் (Zhuhai) ஹாங்காங் (Hong Kong) மற்றும் மக்காவ் (Macau) நகரங்களை இணைக்கும் 55 கி.மீ தூரத்திற்கான கடல் பாலம் எதிர்வரும் புதன்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. இதன் மூலம் ஹாங்காங் மக்காவ் உள்ளிட்ட 11 அருகாமை நகரங்களுக்கும் சீனாவிற்கும் (China Main Land) நேரடி பயணத்தொடர்பு ஏற்பட்டுள்ளது இதனால் இருபுறங்களையும் சேர்ந்த சுமார் 68 மில்லியன் மக்கள் பயனடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் 20 பில்லியன் டாலர் செலவில் ஏறக்குறைய 9 ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள இந்த பாலம் 2016 ஆம் ஆண்டே திறக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது. இந்த கடல் பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் தென்சீனக்கடலின் 56,500 சதுரமீட்டர் கடற்பரப்பை சீன அரசால் எளிதாக கட்டுப்படுத்த முடியும். ஹாங்காங் மற்றும் ஜூஹாய் நகரங்களிடையே கடல் பயண நேரம் முன்பு சுமார் 3 மணிநேரமாக இருந்தது தற்போது 30 நிமிடங்களாக குறைந்துள்ளது.

புதன்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இப்பாலம் திறக்கப்படவுள்ளதையடுத்து நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள அரசுமுறை திறப்பு நிகழ்ச்சிகளில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் ஹாங்காங், மக்காவைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர். இந்தப் பாலம் பயன்பாட்டிற்கு தயாரானதையடுத்து சில நாட்களுக்கு முன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சோதனை ஓட்டங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங்கில் இருந்து சொந்தக் காரில் வருபவர்கள் இந்தப் பாலத்தில் காருடன் பயணிப்பதற்கு சிறப்பு அனுமதி (Need Special Permit) பெற வேண்டும் அல்லது ஹாங்காங் துறைமுகம் அருகே ஓதுக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு இமிக்கிரேசன் கடமைகளை எல்லையில் முடித்தப்பின் இப்பாலத்தை கடப்பதற்கென விடப்பட்டுள்ள டேக்ஸி அல்லது ஷட்டில் பஸ்களில் பயணித்து ஜூஹாய் நகரை வந்தடையலாம். ஷட்டில் பஸ்களில் பயணிக்க 8 டாலர் முதல் 10 டாலர்கள் வரை பயணிக்கும் நேரத்திற்கு தகுந்தாற்போல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுமாம்.

அதெல்லாம் சரி இந்த பாலத்தை பற்றி ஹாங்காங் மக்கள் என்ன நினைக்கின்றார்கள்? குட்டி பிரதேசமான ஹாங்காங்கிற்கு 2016 ஆம் ஆண்டு 56.7 மில்லியன் டூரிஸ்ட்டுகள் வந்து சென்றுள்ளனர், அதேகாலகட்டத்தில் அளவில் பெரிய நாடான இங்கிலாந்திற்கு வருகை தந்த 37.6 மில்லியன் டூரிஸ்ட்டுகள் என்ற எண்ணிக்கையை விட மிகக்கூடுதலாகும். சீனாவிலிருந்து இப்பாலம் வழியாக வந்து குவியப்போகும் சீனர்களால் சுற்றுலாத்துறை பலத்த அடிவாங்கும் என அச்சப்படுகின்றனர். மக்காவ் மக்களோ அல்லது ஹாங்காங் மக்களோ கோரிக்கை வைக்காத நிலையில் அல்லது அதற்கான அத்தியாவசியம் அவர்களுக்கு இல்லாத நிலையில் இப்பாலம் தேவையற்ற ஒன்று என கணிசமான மக்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.