அதிரை நியூஸ்: அக்.21
படிப்புக்கு வயது ஓர் தடையில்லை என நிரூபித்துள்ளார் 75 வயது இமராத்தியான அலி முஹமது நாஜி அட்னாக் நிறுவனத்தில் (Adnoc) பணியாற்றி ஓய்வு பெற்றவரான நாஜி இதற்கு முன் 1980 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் உயர்நிலை டிப்ளோமா பட்டப்படிப்பையும் அட்னாக் நிறுவனத்தின் அனுசரனையுடன் (Sponsored by Adnoc) முடித்துள்ளார்.
குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிப்பை தொடர இயலாமல் அட்னாக் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த நாஜி தற்போது குடும்பச் சுமைகள் குறைந்திருப்பதால் தன்னுடைய 2 ஆண்டு எம்பிஏ முதுகலை பட்டப்படிப்பை தினசரி வகுப்புக்குச் சென்று வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அலி முஹமது நாஜியின் பட்டமளிப்பு விழா குறித்த செய்தியினை அவருடைய மகன் பஹத் அலி சமூக வலைத்தளங்களில் சந்தோஷத்துடன் பகிர, அப்பதிவு ஏராளமானவர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. மேலும் பல்வேறு பக்கமிருந்தும் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.