தஞ்சாவூர் மாவட்டம், காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சியை தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி எதிரில் உள்ள மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (17.10.2018) கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
முன்னதாக, பணியின் போது எதிரிகளால் தாக்கப்பட்டு இறந்த காவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது : -
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. பணியின் போது எதிரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்திய நாட்டில் அனைவரும் அமைதியாக மகிழ்ச்சியுடன் வாழ உள்நாட்டில் காவலர்களும், எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரும், தங்கள் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களை பிரிந்து இரவு பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணியின் போது எதிரிகளால் தாக்கப்பட்டு இறக்கின்ற காவலர்களின் மேன்மையை நாம் அனைவரும் போற்ற வேண்டும். என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
மாராத்தான் ஒட்டம் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே திருச்சி சாலையில் தொடங்கி சரபோஜி கல்லூரி வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்தில் நிறைவு பெற்றது. சுமார் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மாராத்தான் ஒட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்டாலின், பாலசந்தர், ரவிசேகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.