அதிரை நியூஸ்: அக். 27
துபையில் ஒரு கையில் விரல்களே இல்லாமல் பணம் எண்ணும் தன்னம்பிக்கை கேஷியர்.
மாற்றுத்திறனாளிகள் என நாம் அழைப்பது வெறும் சம்பிரதாயச் சொல் அல்ல என பல மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிரூபித்தே வருகின்றனர் என்பதுடன் உடற்குறைபாடுகள் இல்லாத மனிதர்களுக்கும் அவர்கள் சிறந்த, தன்னம்பிக்கை தரும் முன்மாதிரியாகவும் திகழ்கின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு எனும் நகரைச் சேர்ந்தவர் 38 வயது ரோய் அயிபோல்ஸ் (Roe Aepoles) என்பவர் பிறப்பிலேயே ஒரு கையில் 5 விரல்கள் இல்லாத நிலையிலேயே பிறந்திருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு முதல் துபையில் பணியாற்றி வரும் அவர் ஒரு வங்கிக் கேஷியர் என்பது தான் மிகவும் ஆச்சரியமான செய்தி. 10 விரல்களும் உள்ளவர்களே சற்று தடுமாறு ஒரு தொழிலை மிக அனாயசமாக செய்து அசத்துகிறார் இந்த தன்னம்பிக்கை மனிதர்.
ஒரு குழந்தைக்கும் தந்தையான ரோய் பேஸ்கட் பால் மற்றும் ஸ்நூக்கர் விளையாட்டுக்களிலும் ஒரு அசத்தும் வீரர் என்பதுடன் படிப்பிலும் கம்ப்யூட்டர் பாடத்தில் சான்று பெற்றவர். துபையில் எங்கும் தான் பிறரால் தாழ்வு மனப்பான்மையுடன் நடத்தப்படவில்லை என்று பெருமிதம் கொள்ளும் ரோய் செயற்கை விரல்களை பொருத்திக் கொள்ளவதற்கான தேவை ஏதுமில்லை என உற்சாக பதில் தருகின்றார்.
ஒரு கையில் விரல்கள் இல்லாமல் எவ்வாறு சமளிக்கின்றீர்கள் என அவர் நித்தமும் சந்திக்கும் கேள்விக்கு அவரது நிரந்தரவிடை 'நீங்கள் 10 விரல்களால் செய்யும் அனைத்துக் காரியங்களையும் என்னாலும் நிறைவாக செய்ய முடியும்' என்ற அழகிய மறுப்பு மட்டுமே.
உடல் மற்றும் மனக்குறைகளால் மருகுபவர்களே எழுந்து வாருங்கள் நீங்களும் சாதிக்கலாம், அல்ல! அல்ல!! இறையருளால் நீங்கள் நிச்சயம் சாதிப்பீர்கள் இன்ஷா அல்லாஹ்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.