அதிராம்பட்டினம், அக்.23
அதிராம்பட்டினம் பேரூர் பகுதிகளில் புதிதாக அமைத்து வரும் 100 கே.வி திறன்கொண்ட மின்மாற்றி பணிகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட மெயின் ரோடு (2-ம் நம்பர் அரசுப் பள்ளி அருகில்), மிலாரிக்காடு, கடற்கரைத்தெரு, மேலத்தெரு ஆகிய 4 இடங்களில் புதிதாக 100 கே.வி திறன்கொண்ட மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகளை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ இன்று (அக்.23) செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மழை காலங்களில் தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில், அதிராம்பட்டினம் பேரூர் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றவும், சாலையோரத்தில் தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றிவிட்டு, தூய்மைப்பணியை மேற்கொள்ளவும் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், செக்கடிமேடு ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பொருட்களின் தரம் மற்றும் எடை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது, அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் பேரூர் சுகாதார ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் இராம. வெங்கடேசன், முன்னாள் பட்டுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பி.சுப்ரமணியன், பட்டுக்கோட்டை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுப.ராஜேந்திரன், பட்டுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் இரா.கார்த்திகேயன், முன்னாள் தென்னை வாரிய உறுப்பினர் மலை அய்யன், அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் எம்.ஏ முகமது தமீம், ஹாஜா பகுருதீன், முத்துக்கருப்பன், சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.