.

Pages

Wednesday, October 31, 2018

அமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை!

அதிரை நியூஸ்: அக்.31
இஸ்ரேல் பிரதமர் ஓமனுக்கு வருகை தந்ததை தொடர்ந்து அமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டால் தினந்தோறும் பாலஸ்தீன மக்கள் தங்களின் சொல்லெணாத் துயரை நித்தமும் அனுபவித்து வருகின்றனர். அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி என  வர்ணிக்கப்படும் இஸ்ரேலை ஒரு நாடாகவே இதுவரை அரபு நாடுகள் அங்கீகரிக்கவில்லை மேலும் எத்தகைய தூதரக தொடர்புகளோ, போக்குவரத்தோ ஏதுமில்லை எகிப்து மற்றும் ஜோர்டானைத் தவிர.

ஒரு முஸ்லீம் நாடு என்ற அடிப்படையில் முதன்முதலாக 1949 ஆண்டே இஸ்ரேலை அங்கீகரித்த ஒரே நாடு துருக்கி மட்டுமே. 2013 ஆம் ஆண்டு தூதரக உறவு அறுபட்டாலும் மீண்டும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு தூதரக உறவுகளை புதுப்பித்துக் கொண்டனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.26) அன்று இஸ்ரேலின் பிரதமர் ஓமனுக்கு ரகசியமாக சென்று அதன் ஆட்சியாளர் சுல்தான் அல் கப்பூஸை சந்தித்து விட்டு வந்தார். ராஜாங்க ரீதியிலான உறவுகள் ஏதுமில்லாத நிலையிலும்  ஒரு இஸ்ரேலிய பிரதமர் அரபுநாடான ஓமனுக்கு சென்று வந்தது உலக முஸ்லீம்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது ஓயுமுன்பே ஓமன் ஆட்சியாளர் சுல்தான் அல் கப்பூஸ் 'இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக' கூறி உலக முஸ்லீம்களுக்கு மேலும் அவநம்பிக்கைகளை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், இஸ்ரேலின் விளையாட்டுத்துறை அமைச்சர் 'மிரி ரெகவ்' (miri Regev) என்பவர் இஸ்ரேலிய ஜூடோ விளையாட்டுக் குழுவுடன் அபுதாபிக்கு வந்து ஜூடோ விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றதையும், மைதானத்தில் இஸ்ரேலிய தேசிய கீதம் இசைக்கப்பட்டதையும், ஷேக் ஜாயித் மஸ்ஜித் என அழைக்கப்படும் சுற்றுலாத் தளத்திற்கு வந்திருந்ததையும், அங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்ட முதல் இஸ்ரேலிய அமைச்சர் என்ற செய்தியையும் பெருமையுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பகிரங்கமாக எந்த உறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஈரானிய அதிபர் யூத ரப்பிக்களுடன்
ஈரானுடைய அச்சறுத்தலை, பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக அரபு நாடுகளும் இஸ்ரேலும் ஒன்றிணைய வேண்டும் என்ற வாதத்தை இஸ்ரேல் முன் வைக்கின்றது ஆனால் இஸ்ரேலும் ஈரானும் கள்ளக்கூட்டாளி நாடுகள் என்பது உலகமறிந்த உண்மை.

ஏற்கனவே இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் சவுதி அரேபியாவின் மீது பறக்க சவுதி அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியில் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் மற்றும் சவுதி ராணுவத் தளபதிகள் சந்தித்து 'ஈரானிய அச்சுறுத்தல்' குறித்து விவாதித்தனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

https://www.telegraph.co.uk/news/2018/03/23/saudi-arabia-opens-airspace-israel-bound-flight-first-time/

https://www.presstv.com/DetailFr/2018/10/17/577236/Saudi-Arabia-Israel-Gadi-Eizenkot

பாலஸ்தீன மக்களை கைவிட்டு விடாதே யா அல்லாஹ், அவர்களின் ஈமானையும் மனவலிமையையும் அதிகரிக்கச் செய்வாயாக! ஆக்கிரமிப்பு இஸ்ரேலை விரட்டியடித்து மீண்டும் சுதந்திர பாலஸ்தீனம் மலர துணை புரிவாய் யா அல்லாஹ்.

Source: Arab News / Press tv etc..
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.