அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 1955 ஆம் ஆண்டு கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் அவர்களால் துவக்கப்பட்டு 65 ஆண்டு காலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்விப் பணியாற்றி வருகிறது. ஆண்டுதோறும் அனைத்து முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம் காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கிலும், துறைவாரியான கூட்டம் குறிப்பிட்ட நாட்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்ற அனைத்து மாணவர்களும் மேற்படி சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
how to register? is there any link ?
ReplyDelete