.

Pages

Monday, October 29, 2018

வாகன விபத்தில் பெண்ணின் கால் முறிவு ~ ஆப்ரேஷனுக்கு உதவ கோரிக்கை!

அதிராம்பட்டினம், அக்.29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் சாலையில் வாடகை வீட்டில் வசிப்பவர் ரஹ்மான். ஆட்டோ ஓட்டுனர். இவர் கடந்த அக்.24 ந் தேதி மனைவி ஆய்ஷா (வயது 23), தனது 8 வயது பெண் குழந்தை ஆகியோருடன் ஆட்டோ வாகனத்தில் அதிரையிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மணமேல்குடி அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஆயிஷாவின் கால் முறிந்து ஆபத்தான நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். முறிந்து போன கா(ல்)லை ஆப்ரேஷன் மற்றும் தொடர் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார். இச்சிகிச்சைக்கு, ரூ.1.50 லட்சம் வரை செலவாகும் என மருத்துவமனை கூறியுள்ளது. 

ஏழ்மை நிலையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனரால், தனது மனைவியின் கால் ஆப்ரேஷன் ~ தொடர் சிகிச்சை மற்றும் இதர செலவீனங்களுக்காக போதிய நிதியை திரட்ட முடியாத ஏழ்மை நிலையில் நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக அப்பெண்ணின் குடும்பத்தாரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள இவரது குடும்பத்துக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

நிதி உதவி கோரி ரஹ்மான் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : N. SUMAIYA
Bank Name : INDIAN BANK
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 6051129205
IFSC Code: IDIB000A110
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
0091 9994607085 / 9688768285

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.