நடப்பு உம்ரா சீசனுக்கு இதுவரை 5 லட்சத்திற்கு மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது
சவுதியின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் தற்போது வாராந்திர உம்ரா கணக்கீட்டு முறையை (Umrah weekly indicator) வெளியிட்டு வருகின்றது. இந்த கணக்கீட்டு முறையின்படி எத்தகை உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன, எத்தனை பேர் உம்ராவிற்காக வருகை தந்துள்ளார், எத்தனை பேர் உம்ராவை முடித்து வெளியாகியுள்ளனர், எத்ததையெத்தனை பேர் மக்கா மற்றும் மதினாவில் தங்கியுள்ளனர். எந்தெந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் வந்துள்ளனர், விமானம் கப்பல் மற்றும் தரைவழியாக எத்தனை பேர் வந்துள்ளனர் என்பது போன்ற தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
நிகழ்வு ஆண்டு ஹஜ் சீசன் முடிந்த பிறகு துவங்கி உம்ரா சீசனுக்கான விசாக்கள் செப்டம்பர் மாதத்திலிருந்து அக்டோபர் 17 வரை வழங்கப்பட்டுள்ள உம்ரா விசாக்கள் குறித்த வாராந்திர கணக்கீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கணக்கீட்டு அறிக்கையின் படி சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 17 வரை மொத்தம் 535,423 உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. விசா கிடைக்கப் பெற்றவர்களில் 278,706 பேர் இதுவரை வருகை தந்துள்ளனர். 202,792 பேர் இன்னும் புனித நகரங்களில் தங்கியுள்ளனர். மக்காவில் 140,848 பேரும் மதினாவில் 61,944 பேரும் இன்னும் தங்கிpயருக்க, 75,914 பேர் உம்ரா கடமைகள் முடிந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 261,187 பேர் விமானம் மூலமும் 17,519 பேர் தரை மார்க்கமாகவும் உள்வந்துள்ளனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.