.

Pages

Thursday, October 18, 2018

துபை டேக்ஸி அனைத்திலும் இலவச Wi-Fi வசதி!

அதிரை நியூஸ்: அக்.18
துபை டேக்ஸிகள் அனைத்திலும் இலவச வை-பை (Wi-Fi) வசதி செய்யப்படுகின்றது.

துபையில் 6 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 10,800 டேக்ஸிக்கள் இயக்கப்படுகின்றன. இந்த டேக்ஸிக்கள் அனைத்தும் இன்னும் ஒரு வருட காலத்திற்குள் படிப்படியாக இலவச வை-பை (Wi-Fi) வசதியுள்ள  டேக்ஸிக்களாக மாறவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் துபை போக்குவரத்து துறை (RTA) மற்றும் டூ (Du) தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே கையெழுத்தகின.

ஏற்கனவே துபையில் இயங்கும் சுமார் 500 டேக்ஸிக்களில் பரீச்சார்த்த ரீதியாக டூ தொலைத்தொடர்பு நிநுவனம் இலவச வை-பை வசதிகளை தந்து கொண்டுள்ளது வெற்றியடைந்ததை தொடர்ந்தே அனைத்து டேக்ஸிக்களுக்கும் இச்சேவை விரிவாக்கம் செய்யப்படுகின்றது. ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து டூ தொலைத்தொடர்பு நிறுவனம் டேக்ஸிக்களில் வை-பை வசதியை ஏற்படுத்தும் வேலைகளை உடனடியாக துவக்கிவிட்டது, இப்பணிகள் ஒரு வருட காலத்திற்குள் முழுமையாக நிறைவடையும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.