அதிரை நியூஸ்: அக்.18
அமீரகத்தில் அக்டோபர் 21 முதல் விசா சட்டங்களில் புதிய மாற்றங்கள் அமலாகிறது
அமீரக விசா சட்டங்களில் புதிய மாற்றங்கள் மற்றும் சலுகைகள் எதிர்வரும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் அமலாகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட சில வகைகளின் கீழ் வரும் பெண்கள், மாணவர்கள் மற்றும் விசிட் விசாக்களில் வந்தவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
விதவை மற்றும் விவாகரத்தான பெண்கள், குழந்தைகள் மற்றும் இரத்த உறவுகள்:
அமீரகத்தில் கணவருடைய விசா ஸ்பான்சரின் கீழ் வசித்து வரும் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் திடீரென கணவரை இழந்துவிட்டாலோ அல்லது விவாகரத்தாகிவிட்டாலோ இனி கவலைப்படத் தேவையில்லை. மேற்படி பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் இரத்த உறவுகள் விசா ஸ்பான்சர் இன்றியே கணவர் இறந்த தேதி அல்லது விவாகரத்தான தேதியிலிருந்து கூடுதலாக ஒரு வருடம் வரை ரெஸிடென்ஸ் விசாவை பெற்றுக் கொண்டு வசிக்கலாம்.
கூடுதல் ஒரு வருட விசாவிற்கு விண்ணப்பிக்கும் காலத்தில் அவர்களுடைய முந்தைய விசாக்கள் செல்லுபடியானதாக (Valid Visa) இருக்க வேண்டும், சட்ட விரோதமாக தங்கி இருந்திருக்கக் கூடாது. கணவர் ஸ்பான்சரின் கீழிலிருந்த விசாக்களை ரத்து செய்ய தலா 100 திர்ஹம் மற்றும் கூடுதல் 1 வருட விசா கட்டணம் என 100 திர்ஹம் ஆகியவை வசூலிக்கப்படும்.
இந்த நீட்டிக்கப்பட்ட ஒரு வருட விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இறப்பு சான்று அல்லது விவாகரத்து சான்று, வீட்டு வாடகை ஓப்பந்தம், மருத்துவ சோதனைச் சான்று, விண்ணப்பதாரர்கள் அனைவருடைய எமிரேட்ஸ் ஐடிக்கள், இன்ஷூரன்ஸ் உள்ளதற்கான சான்று மற்றும் வருமானச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
மாணவர்கள் ஒரு வருட கூடுதல் விசாக்களை பெறுவதற்கான நடைமுறைகள்:
பெற்றோர்களின் விசா ஸ்பான்சரின் கீழ் அமீரகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்களுக்கும் தனித்து ஒரு வருட மாணவர் விசா வழங்கப்படும். இந்த மாணவர் விசாவை மேலும் ஒரு வருடம் நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க 100 திர்ஹம் செலுத்த வேண்டும் அதேபோல் கூடுதல் ஒரு வருடத்திற்கு மாணவர் விசாவை நீட்டித்துக் கொள்ளவும் 100 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி உத்தரவாதத் தொகை செலுத்தத் தேவையில்லை. மாணவர்கள் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரிகளிலிருந்து உறுதி செய்யப்பட்ட படிப்புச் சான்றிதழை (Attested Graduation Certificate) பெற்று இணைக்க வேண்டும். இந்த கல்விக்கூடங்கள் அமீரகத்திற்குள் இருந்தாலும் சரியே அல்லது அமீரகத்தில் தங்கியிருந்து கொண்டு (Under UAE Residency) வெளிநாட்டு கல்வி நிலையத்தில் படித்து வந்தாலும் சரியே, இச்சலுகையை தொடர்ந்து அனுபவிக்கலாம்.
விசிட் மற்றும் சுற்றுலா விசாவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:
விசிட் விசா அல்லது சுற்றுலா விசாவின் எந்த வகையின் கீழ் அமீரகத்திற்கு வந்திருந்தாலும் அவர்களுடைய விசாக்களை தலா 30 நாட்கள் என 2 முறை நீட்டிப்பு செய்து கொள்ளலாம். நீட்டிப்பு செய்து கொள்ள விரும்புபவர்கள் நடப்பு விசா கலாவதியாகும் முன்பே விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். விசிட் மற்றும் சுற்றுலா விசாக்களை ஒவ்வொரு முறையும் நீட்டிப்பு செய்திட தலா 600 திர்ஹங்கள் செலுத்த வேண்டும்.
விசா நீட்டிப்புக்காக முன்புபோல் அமீரகத்தை வெளியேற வேண்டிய அவசியமில்லை. காலாவதியான விசாவுடன் (Expired Visa) தங்கியிருப்பவர்கள் கூடுதல் ஒவ்வொரு நாளுக்கும் தலா 100 திர்ஹம் என அபராதம் செலுத்த வேண்டும், இந்த அபராதம் விசா முடிந்த 10வது நாளிலிருந்து கணக்கிடப்படும்.
முக்கிய அறிவுறுத்தல்கள்:
மேற்காணும் விசாக்களுக்கு விண்ணப்பிக்க தஃசீல் அலுவலகங்கள், ஆன்லைன் வழியாக மற்றும் நாடெங்கிலுமுள்ள ரெஸிடென்ஸ் விசா வழங்கும் மையங்களில் (இமிக்கிரேசன்) விண்ணப்பிக்கலாம்.Applications for all facilities can be submitted online via e-channel, Tas’heel offices and residency departments across the country.
வளைகுடா அரபு நாடுகளில் ரெஸிடென்ஸ் விசாவின் கீழ் உள்ளவர்கள் விசிட் அல்லது சுற்றுலா விசாவின் கீழ் வந்திருந்தால், சிறப்பு அனுமதியின் கீழ் வந்தவர்கள் மற்றும் 96 மணிநேர அனுமதி விசாவின் கீழ் வந்தவர்களுக்கு விசா நீட்டி கிடையாது.(This decision does not cover visitors who are resident in other GCC countries, or those on special entry permits and the 96-hour permit for special missions)
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.