தஞ்சாவூர் மாவட்டம், புதிய நன்னீர் மீன் வளர்ப்பு குளம் அமைப்பதற்கான மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
தமிழக அரசின் மீன்வளத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி எனும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு புதிய நன்னீர் மீன் வளர்ப்பு குளம் அமைத்திடவும், ஏற்கனவே உள்ள மீன் வளர்ப்பு குளங்கள் மற்றும் தொட்டிகளை சீரமைத்து புதுப்பிக்கவும், மீன்வளர்ப்பு இடுபொருட்களுக்கு தேவைப்படும் செலவினத்திற்கும் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் புதிய நன்னீர் மீன் குளம் மற்றும் குட்டை அமைத்திட தேவைப்படும் மொத்த செலவினத்தொகையான ரூ.7 இலட்சத்திற்கு அதிகபட்ச மானியமாக 40 சதவிகிதமான ரூ.2.80 இலட்சமும், ஏற்கனவே உள்ள மீன் வளர்ப்பு குளங்கள் மற்றும் தொட்டிகளை சீரமைத்து புதுப்பிக்க ஒரு ஹெக்டேருக்கு தேவைப்படும் மொத்த செலவினத் தொகையான ரூ.3.5 இலட்சத்திற்கு அதிகபட்ச மானியமாக 40 சதவிகிதமான ரூ.1.4 இலட்சமும், ஒரு ஹெக்டேர் பரப்பளவில் மீன் வளர்ப்பிற்கு தேவைப்படும் இடுபொருள் செலவினத்தொகையான ரூ.1.50 இலட்சத்தில் அதிகபட்ச மானியமாக 40 சதவிகிமான ரூ.60 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள தகுதியுள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
நன்னீர் மீன்வளர்ப்பு மானிய திட்டம் குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தஞ்சாவூர் கீழவாசல் அண்ணா சாலையில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.