அதிரை நியூஸ்: அக்.24
சிங்கப்பூரில் பைலட் இல்லா டிரோன் டேக்ஸிக்களை அறிமுகம் செய்யவுள்ளது ஜெர்மனி நிறுவனம்
போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கும் சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையுமென எதிர்பார்க்கப்படும் பறக்கும் ஹோவர் டேக்ஸிக்களை அடுத்தாண்டு பரீட்சித்து பார்க்கவுள்ளது ஜெர்மனியை சேர்ந்த வோலோகாப்டர் ( Volocopter ) எனும் நிறுவனம். இந்த டிரைவரில்லா பறக்கும் டேக்ஸிக்கள் டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவைகளின் கலவை தொழிற்நுட்பத்தில் உருவாகியுள்ளது.
செங்குத்தாக ஏறி இறங்கும் இந்த பறக்கும் டேக்ஸிக்களை உள்ளிருந்தும் பைலட் துணை கொண்டும் இயக்கலாம், தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் மூலமும் பைலட் இல்லாமலும் தொலைக்கட்டுப்பாடு கருவியின் (Remote Control) வழியாகவும் இயக்கலாம். 2 பயணிகள் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இவை சுமார் 30 கி.மீ (19 மைல்) தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும் சக்தி உடையவை. இவை பூமியிலிருந்து சுமார் 100 மீட்டர் (330 அடி) உயரத்தில் பறக்கும் தன்மையுடையவை.
இந்த டேக்ஸிக்கள் பறக்கும் போது வெளிப்புற சத்தங்கள் ஏதும் உள்வராது அதுபோல் சிறிய அளவிலான வானிலை கொந்தளிப்புகளையும் ( Minor Turbulence ) தாங்கக்கூடியது என்பதுடன் வானுயரக் கட்டிடங்களையும் லாவகமாக கடந்து செல்லக்கூடியவை. இவை அடுத்தாண்டு சிங்கப்பூரில் பலகட்ட சோதனைகளுக்குப் பின் அறிமுகமாகவுள்ளது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.