.

Pages

Saturday, October 27, 2018

துபையில் இஸ்லாத்தை தழுவியோருக்கான குர்ஆன், ஹதீஸ் மனனப்போட்டி!

அதிரை நியூஸ்: அக்.27
கடந்த 15 வருடங்களுக்குள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான பிரத்தியேக குர்ஆன் மற்றும் சுன்னா மனனப் போட்டிகளை 3வது வருடமாக துபையில் செயல்படும் இஸ்லாமிய தகவல் மையம் மற்றும் தார் அல் பெர் சொசைட்டி ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன. (The Islamic Information Centre - IIC of Dubai and the Dar Al Ber Society)

பெரியவர்கள் (ஆண், பெண்) மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனி பிரிவாக நடத்தப்படவுள்ள போட்டிகளின் வெற்றியாளர்கள் புனித உம்ரா கடமையை நிறைவேற்றிட அழைத்துச் செல்லப்படுவதுடன் மொத்தம் 80,000 திர்ஹம் மதிப்புள்ள பணப்பரிசுகளையும் வெல்வர். கடந்த 2 வருடங்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய 90 நபர்கள் இதுவரை புனித உம்ராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பொதுவாக புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் குர்ஆன் மற்றும் சுன்னாவுடன் தங்களுடைய உறவை நெருக்கமாக்கிக் கொள்ள முயல்வார்கள் அத்தகைய ஆர்வலர்களின் முயற்சிக்கு இந்த மனனப் போட்டிகள் மேலும் வலு சேர்க்கும் என இதன் ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முதல் வருடம் இஸ்லாத்தை தழுவிய 28 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 முஸ்லீம்கள் பங்கேற்ற நிலையில் கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. எனவே இவ்வருடம் கடந்த ஆண்டின் பதிவுகளை கடந்து புதிய சாதனை எண்ணிக்கையில் முன்பதிவுகள் வரும் என்பதன் அறிகுறிகள் தெரிகின்றன.

குர்ஆன், சுன்னா (ஹதீஸ்) மனனப் போட்டிகள்  குறித்த விபரங்கள்:
இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் 15 வருடங்களுக்குள் இஸ்லாத்தை தழுவியவர்கள் எதிர்வரும் அக்டோபர் 31க்கு முன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 24 மணிநேரமும் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

முதல் 2 சுற்றுக்கள் மட்டும் ஆன்லைன் வழியாக நடத்தப்படும். போட்டியாளர்கள் தங்களுடைய குரல் பதிவுகளை ஆன்லைன் வழியாக மிக எளியமுறையில் பதிவேற்றம் செய்ய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்த போட்டியாளர்களுக்கான முழுமையான மனனம் மற்றும் உச்சரிப்பு பயிற்சிகள் எதிர்வரும் நவம்பர் 10 முதல் சத்வாவில் உள்ள இஸ்லாமிய தகவல் மையத்தில் துவங்கும்.

இறுதிச்சுற்றுப் போட்டிகள் ஷேக் ஜாயித் சாலையில் அமைந்துள்ள தார் அல் பெர் தலைமையகத்தில் எதிர்வரும் 2019 ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறும்.

போட்டியின் முடிவுகள் ஜனவரி 22 ஆம் தேதி வெளியிடப்படும். மேலும் விபரங்களுக்கு: www.islamicic.com/quran

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.