அதிரை நியூஸ்: அக். 26
உலகின் மிக மிக பழமையான கப்பல் கருங்கடல் அடியில் அழியாத நிலையில் கண்டுபிடிப்பு
பெரும்பகுதிகள் சிதிலமடையாத நிலையில் உலகின் பழமையான, மூழ்கிய கப்பல் ஒன்று கருங்கடல் (Black Sea) அடியில் முழுமையான தோற்றத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார்பன் டேட்டிங் மூலம் இதன் வயது 2,400 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதுவே இதுவரை கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலிலேயே மிகவும் பழமையானது என்பதுடன் சிதிலமடையாது மூழ்கிய நிலையிலேயே கிடைத்துள்ளது.
கருங்கடலில் சுமார் 2 கி.மீ (2,000 மீட்டர், 6,500 அடி) ஆழத்தில் உறங்கிக் கொண்டுள்ள இந்த கப்பல் சிதிலமடையாமல் இருப்பதன் காரணம் கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் இல்லாமல் இருப்பது தான் அதன் தன்மை மாறாமலும் அரிக்கப்படாமலும் வைத்துள்ளது என கடலடி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். (The water at that depth is oxygen-free, meaning that organic material can be preserved for thousands of years)
கடலடி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 3 வருடங்களாக கருங்கடல் அடியில் ஆய்ந்து வருகின்றனர் என்பதுடன் கடலடியில் எண்ணெய் வளத்தை கண்டுபிடிப்பதற்குப் பயன்படும் அதிநவீன கேமிராக்களையும் இதற்கென முதன்முறையாக உபயோகித்துள்ளனர்.
கிரேக்க நாட்டு வணிகக் கப்பலாக இருக்கலாம் என கருதப்படும் இந்தக் கப்பலுடன் சேர்த்து ரோமர்கள் (Romans), 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொசாக்கியர்கள் (Cossacks) உள்ளிட்ட பல இனத்தினரின் பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த மேலும் சுமார் 60 மூழ்கிய கப்பல்களையும் ஆராய்ச்சியாளர்கள் கருங்கடலின் பல்வேறு பகுதியிலும் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் அதாவது கி.மு 400 ஆண்டுகளிலேயே கிரேக்கர்களே கடல் வணிகத்தில் கோலோச்சி வந்ததும் இக்கண்டுபிடிப்பு மூலம் மீண்டும் மறுமுறை நிறுவப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.