.

Pages

Wednesday, October 24, 2018

அமீரகத் தயாரிப்பில் கலீஃபா சாட்டிலைட் அக்.29 ல் விண்ணில் ஏவல்!

அதிரை நியூஸ்: அக்.24
அமீரக எஞ்சினியர்களால் சுயமாக தயாரிக்கப்பட்ட கலீஃபா சாட்டிலைட் அக்.29 அன்று ஏவப்படுகிறது.

முழுக்க முழுக்க அமீரக எஞ்சினியர்களால் உருவாக்கப்பட்ட கலீஃபாசேட் (Khalifa Sat) எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கைகோள் எதிர்வரும் அக்டோபர் 29 ஆம் தேதி அன்று அமீரக நேரம் காலை 8.08 மணி நிமிடத்தில் ஜப்பானின் டெனிகாஷிமா ஸ்பேஸ் சென்டரிலிருந்து ஏவப்படவுள்ளது.

இறுதிக்கட்ட கண்காணிப்பின் கீழ் இருக்கும் கலீஃபா சேட்டிலைட் சுமார் 15 முதல் 20 நிமிடத்திற்குள் விண்ணில் சுமார் 613 கி.மீ தூரத்தில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். எனினும் செயற்கைகோள் முழுமையாக செயல்படத் துவங்க 2 மணிநேரமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலீஃபா சேட்டிலைட்டின் 2 தரைக்கட்டுப்பாட்டு நிலையங்கள் துபையில் ஒன்றும் நார்வேயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது தனது முதலாவது போட்டோவாக மிக மிக முக்கியமாதொரு பகுதியில் படமெடுத்து அனுப்பும், அது எந்தப் பகுதி என்பது தற்போதைக்கு ரகசியம் என முஹமது பின் ஜாயித் ஸ்பேஸ் சென்டரின் கலீஃபாசேட் புரொஜக்ட் மேனேஜர் ஆமர் அல் சாயெக் தெரிவித்துள்ளார்.

ராக்கெட் ஏவுதல் தொடர்பில் பொது அறிவிற்கான சில தகவல்கள்:
ஜப்பானிலிருந்து கலீஃபாசேட் எனும் செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட் ஏவப்படும் போது விஞ்ஞானிகள் குழு 4 பிரிவாக செயல்படும்.

விஞ்ஞானிகள் குழு 1: 
ராக்கெட் ஏவுதளத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் ஆழத்தில் தரைக்கடியில் அமைக்கப்பட்டுள்ள பங்கர் எனும் நிலவறையிலிருந்து செயல்படும். இவர்கள் ராக்கெட் ஏவப்படுவதற்கு 12 மணிநேரத்திற்கு முன்பாக இந்த நிலவறைக்குள் அனுப்பப்பட்டு பங்கர் பூட்டப்படும். இவர்கள் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்படுவதற்கான அனைத்துப் பணிகளையும் செய்வார்கள்.

விஞ்ஞானிகள் குழு 2:
தகிசாகி ரேஞ்ச் கண்ட்ரோல் சென்டரிலிருந்து (Takesaki Range Control Centre) செயல்படும் இந்த விஞ்ஞானிகள் குழு ராக்கெட்டிற்கு எரிபொருள் நிரப்புவது, ராக்கெட் ஏவப்படுவதை கண்காணிப்பது மற்றும் ராக்கெட்டிலிருந்து செயற்கைகோள் தனியாக பிரிந்து செல்வது போன்ற பணிகளை மேற்கொளளும்.

விஞ்ஞானிகள் குழு 3:
தகிசாகி அப்சர்வேசன் ஸ்டேன்ட் (Takesaki Observation Stand) எனப்படும் பார்வை மாடத்திலிருந்து இன்னொரு விஞ்ஞானிகள் குழு ராக்கெட் ஏவப்பட்டு விண்ணில் சீறிப்பாய்ந்து செல்வதை கண்காணிக்கும். இந்த மாடம் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும்.

விஞ்ஞானிகள் குழு 4:
மேற்படி பணிகள் அனைத்தும் நடைபெறும் அதே நேரத்தில் இவை அனைத்தையும் கண்காணித்துக் கொண்டு செயற்கைகோள் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதுடன் செயற்கைகோள் அனுப்பத் துவங்கும் புகைப்படங்களை பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.