அதிரை நியூஸ்: அக். 26
இது தேர்தலை நிறுத்துவதற்காக கொடுக்கப்பட்ட போலி மழை வெள்ள ரெட் அலர்ட் அல்ல மாறாக நமக்கு நாமே கொடுத்துக் கொள்ள வேண்டிய அலர்ட் இது! அபுதாபியில் நடைபெற்ற அமீரக அரசின் அனைத்து மனிதவளத்துறைக்கான 6வது மாநாடு நடைபெற்றதில் (Sixth GOV HR Summit held in Abu Dhabi) வேலைவாய்ப்புக்களில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து ஆழமாக விவாதிக்கப்பட்டது.
வளைகுடா அரபு நாடுகளில் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் சுமார் 75% பேர் வெளிநாட்டினர்களாம் அதிலும் அமீரகத்தில் மட்டும் 91% வெளிநாட்டினர் பணியாற்றுகின்றார்களாம் அதேவேளை அமீரகத்தினர் வெறும் 8% பணியாற்றுகின்றனர் என்றும் இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 6 சதவிகிதமாகவும் 2030 ஆம் ஆண்டில் 3 சதவிகிதமாகவும் குறையக்கூடும் என்ற கவலையை அரசு அதிகாரிகள், நிபுணர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். மந்தமான உலகப் பொருளாதார வளர்ச்சியினால் அருகிவரும் வேலைவாய்ப்புக்கள் இதன் முக்கிய பின்னனியாகும்.(With slower economic growth and job losses becoming a common phenomenon across the globe)
புள்ளி விபரங்கள் கவலை தருவதாக வெளியாகியுள்ளதால் அரசு வேலைவாய்ப்புக்களிலும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புக்களிலும் அமீரகத்தினருக்கே முன்னுரிமை தர வேண்டும், இது தொடர்பாக நாம் பலமுறை பேசியிருந்தாலும் அனைத்து அரசு வேலைவாய்ப்புக்களையும் நிரப்பும் வகையில் அமீரகத்தினர் தங்களின் தகுதிகளை வளர்த்துக் கொள்வதில் மிகவும் பின்தங்கியே உள்ளதாகவும் இதன் காரணிகளாக நிறுவன குறைபாடுகள், தலைமைத்துவ தோல்வி, மேலாண்மை பணி ஆகியவை முக்கிய இடம் வகிப்பதாக இனம் காணப்பட்டுள்ளது.(The obstacles related to organisational inefficiencies, failure of leadership, and management style in both the public and private sector have resulted in the ineffectivity of the nationalization policy)
வேலைதேடும் அமீரகத்தினரின் எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் சுமார் 30,000 இருந்தது நடப்பு 2018 ஆம் ஆண்டில் 36,000 ஆக உயர்ந்துள்ளதும் இம்மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது. அரசின் புள்ளி விபரப்படி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அமீரகத்தினரின் எண்ணிக்கை 2 சதவிகிதம் மட்டுமே. சவுதி அரேபியா, ஓமன் போன்ற நாடுகள் பல அரசு வேலைகளையும் சில தனியார் துறை வேலைகளையும் சொந்த நாட்டினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என கட்டாய சட்டங்கள் இயற்றி நடைமுறைப்படுத்தி வருவதும் எடுத்துக்காட்டாக பேசப்பட்டது.
மேற்காணும் காரணங்கள் அலசப்பட்டிருந்தாலும் மிக முக்கியமானதொரு காரணம் பேசப்படவேயில்லை அதுதான் ஆன்லைன் மயமாகும் அமீரக அரசு வேலைகள். வேலைகள் படிப்படியாக ஆன்லைன் மயமாகும் போது ஊழியர்கள் இயல்பாகவே வேலையை இழப்பார்கள் அல்லது புதிதாக யாரும் வேலைக்கு எடுக்கப்பட மாட்டார்கள் எனும் போது அவர்களின் அடுத்த இலக்கு தனியார் துறையின் முக்கிய பொறுப்புக்களை நிரப்புவதாகத் தான் இருக்கும்.
குறிப்பிட்ட சில வேலைகளை செய்வதற்கு அவர்கள் கீழிறங்கி வரமாட்டார்கள் என்றாலும் பெரும்பான்மையான அலுவலக வேலைகள் அவர்களுக்கு செல்வது உறுதி எனும் போது வெளிநாட்டவர்கள் வெளியேறத் தான் நேரிடும்.
நமக்கு நாமே ரெட் அலர்ட்! புரிந்திருக்கும் என நம்புகிறோம். நம்முடைய தகுதிகளை வளர்த்துக் கொள்வதுடன் மாற்று வழிகளையும் நாம் பரிசீலிப்பதே எதிர்காலத்திற்கு நல்லது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.