அயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றார்
1990களில் மேற்கு உலகில் மிகவும் மதிக்கத்தக்க பாடகியாக வலம் வந்த ஐரீஷ் பெண்ணான சினீத் ஓ' கார்னர் (Sinead O'Connor) புனித இஸ்லாத்தை ஏற்று தனது பெயரையும் ஷூஹாதா என மாற்றிக் கொண்டார், அல்ஹம்துலில்லாஹ். தற்போது 51 வயதான இவர் மக்தா டேவிட் (Magda Davitt) என்ற இன்னொரு பெயராலும் அழைக்கப்பட்டு வந்தார்.
தான் பல்வேறு மதங்களையும் ஆராய்ந்த பின்பே சுயவிருப்பத்துடன் இஸ்லாத்திற்குள் நுழைவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதுடன் 'ஹிஜாப் அணியுங்கள்' "Wear a hijab. Just do it." என்ற வாசகத்தையும் இடம் பெறச் செய்துள்ளார். இதன் மூலம் தான் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுள்ளதை பகிரங்கமாக உலகிற்கு தெரியப்படுத்துவதற்காகத் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
"This is to announce that I am proud to have become a Muslim. This is the natural conclusion of any intelligent theologian's journey," she tweeted.
ஹிஜாப் எனும் கண்ணியத்தை ஏற்றுள்ள இந்தப் பெண்மணியின் இளமை வாழ்க்கை அரைகுறை ஆடைகளாகவும், மழிக்கப்பட்ட தலையாகவும், கேடுகெட்ட மேற்கத்திய கலாச்சாரமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இனிமையான குரலையுடைய இப்பெண்மணி இஸ்லாத்தை தழுவிய பின் முதன்முதலாக தனது குரலில் பங்கோசையை எழுப்பி தனது டிவிட்டர் பக்கத்தில் இடம் பெறச்செய்துள்ளார்.
உலகெங்கும் இவ்வாறு ஆய்ந்து உணர்ந்து இஸ்லாத்தை பல்லாயிரக்கானோர் தழுவும் அதேவேளையில் பல நாடுகள் இஸ்லாமியர்களை பூண்டோடு அழிக்கும் பல்வேறு நாசகர திட்டங்களை வன்மமாக செயல்படுத்தி வருகின்றது.
குறிப்பாக சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் செரிந்து வாழும் உய்குர் இன முஸ்லீம்களையும் அவர்களின் கலாச்சாரங்களையும் அழிக்கும் நோக்குடன் சிறார்களை பெற்றோர்களிடமிருந்து பிரித்து தனி முகாம்களில் அடைத்து அவர்கள் இஸ்லாத்தின் வாடையே தெரியாமல் வளரச் செய்தும், பெரியவர்களை பிடித்து வேறு தனித்தனி முகாம்களில் அடைத்து கம்யூனிச பாடங்களை கட்டாயப்படுத்தி கற்கச் செய்வதுடன், இளைஞர் இளைஞிகளுக்கு தனியே அடைத்து தேசபக்கி என்ற பெயரில் மூளைச் சலவை செய்து இஸ்லாத்தை விட்டு வெளியேறச் செய்யும் நடவடிக்கைகளிலும் சீன கம்யூனிச அரசு மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது.
https://www.youtube.com/watch?v=qmvyjwLxC5I
https://twitter.com/BBCNewsAsia/status/1054963550349914112
https://www.bbc.com/news/world-asia-china-45474279
https://www.bbc.com/news/world-asia-45812419
http://www.theweek.co.uk/97335/china-s-secret-muslim-internment-camps-revealed
https://www.businessinsider.com/life-inside-china-internment-camps-for-uighur-minority-in-xinjiang-bbc-report-2018-8
https://www.vox.com/2018/10/24/18018282/china-reeducation-camps-uighur-muslims
https://www.youtube.com/watch?v=5bwkiZlsAcY
சகோதரர்களே!
இந்த உய்குர் இன முஸ்லீம்கள் மீண்டும் குடும்பமாக இணைந்து வாழவும், இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக பின்பற்றவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு தூயவன் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
சீன கம்யூனிச அரசும் தன் தவறை உணர்ந்து திருந்தவும், இதர சீனர்களுக்கும் இஸ்லாம் சென்று சேரவும் துஆ செய்யுங்கள். உங்களுடைய துஆக்களே அவர்களுக்கு உதவும் ஒரே நம்பிக்கை.
Source: Khaleej Times / BBC / vox / businessinsider / theweek etc...
தமிழில்: நம்ம ஊரான்
இன்ஷா அல்லாஹ்... அனைவரும் துஆ செய்வோமாக.
ReplyDelete