.

Pages

Friday, October 19, 2018

பேராவூரணியில் விற்பனைக்கு வந்த ராட்சத மாங்காய் ~ வாடிக்கையாளர் வியப்பு (படங்கள்)

பேராவூரணி, அக்.19-
காய்கறிக் கடையில் விற்பனைக்கு வந்த அபூர்வ ரக ராட்சத மாங்காயை வாடிக்கையாளர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் காய்கறிக்கடை நடத்தி வருபவர் சரவணன். இவர் தமிழகத்திலும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வகையான காய்கறி வகைகளை கொண்டு வந்து வியாபாரம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவிற்கு காய்கறி கொள்முதலுக்கு சென்றபோது, அங்கிருந்து மாங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தார். அப்படி கொண்டு வந்த மாங்காய் ஒவ்வொன்றும் தலா 1 கிலோ முதல் 2 கிலோ வரை எடை கொண்டதாகவும், ராட்சத வடிவிலும் இருந்தது. இதனை கடையில் பார்வைக்காக தொங்க விட்டிருந்தார். கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஆச்சரியமாக ராட்சத வகையிலான அபூர்வ மாங்காயை பார்த்துச் சென்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.