அதிரை நியூஸ்: அக்.11
உலகில் ஒருவருக்கு மகிழ்ச்சியை தரும் அதேநாளில் இன்னொருவர் வேதனையை அனுபவித்திருப்பார். எனவே, எந்தவொரு நாளும் கெட்ட நாளும் அல்ல நல்ல நாளும் அல்ல, இரண்டும் கலந்த வருவதே இறைவனின் ஏற்பாடு.
இன்று மட்டும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் 3 இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் நான்காவதாக ஒன்றை எதிர்பார்த்துள்ளோம். இன்று அதிகாலை (நள்ளிரவில்) ஆஸ்திரேலியா அருகிலுள்ள பப்புவா நியூ கினியா என்ற நாட்டிலிருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் சுமார் 40 கி.மீ ஆழத்தில் கடலுக்குள் 7.0 எனும் ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்டது. பிற சேதங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.
இன்னொருபுறம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மைக்கேல் புயல் எனப் பெயரிடப்பட்ட நான்காம் நிலை சூறாவளி மணிக்கு 155 கி.மீ வேகத்தில் வீசியது. இது 1992 ஆம் ஆண்டுக்குப் பின் வீசிய புயல்களிலேயே மிகவும் சக்திவாய்ந்ததாகும். சேதங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன.
நமது இந்தியாவிலும் ஆந்திரா மற்றும் ஓடிஷா மாநில கடலோரப் பகுதிகளில் டிட்லி எனப் பெயரிடப்பட்ட புயல் ஆந்திராவில் இதுவரை 8 பேர்களின் உயிர்களை பறித்துள்ளதுடன் மரங்களை வேரோடு பிடிங்கி வீசிச்சென்றுள்ளது. சேதங்கள் இன்னும் அதிகமிருக்கும் என கவலையுடன் எதிர்நோக்கப்படுகின்றது.
ஓமனிலிருந்து தற்போது சுமார் 327 கி.மீ தொலைவில் கடலுக்குள் மையங் கொண்டுள்ள லுபான் புயல் ஓமானின் தோபார் பிரதேசம், ஏமன் மற்றும் சொகற்றா தீவு ஆகியவற்றை பாதிக்கும் என வானிலை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது 1 ஆம் நிலை புயலாக இருக்கும் லுபான் இன்றிரவுக்குள் 2 ஆம் நிலை புயலாக உருவெடுக்க உள்ளது இதனால் ஓமன் மற்றும் ஏமனில் மணிக்கு சுமார் 125 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும், கனமழையும் இருக்கும்.
தொகுப்பு: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.