தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் நெய்னா முகமது. இவரது மகன் ஹாஜா நஜ்முதீன். இவர், கடந்த 10 ஆண்டுகளாக துபையில் பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகள் ஹனான் ஹில்மிய்யா (வயது 14). துபையில் உள்ள தி சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அமீரகத்தில் நடப்பாண்டு 'ஜாயித்' ஆண்டாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தினத்தந்தி அமீரகப் பதிப்பு சார்பில், அமீரக மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
'அமீரகத்தின் தந்தை சேக் ஜாயித்' என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில், அமீரகத்தின் பல்வேறு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் 200 பேர் பங்குபெற்றனர். இதில், மாணவி ஹனான் ஹில்மிய்யா முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தினர். விழாவில், சிறப்பு விருந்தினராக 'எழுத்தாளர்' பட்டுக்கோட்டை பிரபாகர் கலந்துகொண்டு, மாணவிக்கு கேடயப்பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதையடுத்து, முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்திய மாணவி ஹனான் ஹில்மிய்யாவுக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், சக மாணவர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்துகள்...
ReplyDelete