தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேல உளுர் ஊராட்சியில் கல்யாணஓடை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (08.10.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது: -
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேல உளுர் கிராமம்,கல்யாண ஓடை வாய்க்காலின் இடதுபுற கரையில் 11.30 மீட்டர் தொலைவில் 10 மீட்டர் அளவுக்கு இன்று (08.10.2018) காலை 10.00 மணியளவில் உடைப்பு ஏற்பட்டது. வாய்க்காலின் கரையிலிருந்த வேலமரம் மற்றும் தேக்கு மரங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்து வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் விரைந்து சென்று உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டு பொது மக்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்யாணஓடை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட பொழுது 840 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. உடைப்பு ஏற்பட்டது தெரிந்தவுடன் கல்யாண ஓடை வாய்க்காலின் தலைமதகு அமைந்துள்ள சூரக்கோட்டை கிராமத்தில் வாய்க்காலுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டு உடைப்பினை அடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் நீர் முற்றிலும் வயல்பகுதியில் சென்று கொண்டுள்ளது. இதனால் குடியிருப்புகளுக்கோ, கால்நடைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், உடைப்புகளை சரி செய்வதற்கு தேவையான சவுக்கு கம்புகள் மற்றும் மணல் மூட்டைகள் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இவ்உடைப்பினை சரி செய்யும் பணி இரண்டு தினங்களுக்குள் முடிக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கல்லணைக் கால்வாய்) முருகேசன், மாவட்ட வன அலுவலர் குருசாமி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு மீட்பு துறையினர் ஆகியோர் உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.