பேராவூரணி அக்.04-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் வியாழன் அன்று காலை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி தலைமை எழுத்தர் சிவலிங்கம் தலைமை வகித்தார்.
வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, ரோட்டரி சங்க தலைவர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேசிய பேரூராட்சி அலுவலர்கள், " அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உணவகம், தேநீர் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தக் கூடாது. கடைகளில் விற்பனை செய்யவும் கூடாது. விதிமீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
வர்த்தகர்கள் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க உரிய மாற்று ஏற்பாடுகளுக்கு கால அவகாசம் தேவை எனக் கூறப்பட்டது. மேலும் கடைவீதியில் பொதுமக்களுக்கு இடையூறாக திரியும் மாடுகளையும், குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பன்றிகளையும் அப்புறப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
வர்த்தகர்கள் எம்.எஸ்.நீலகண்டன், கு.லெட்சுமணன், கு.வள்ளியப்பன், பாலு, அப்துல்ரகுமான், யாசின், கே.கான் முகமது, ஏ.கே.வெள்ளிமலை, உணவக, தேநீர் கடை உரிமையாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரமணி, சிவசுப்பிரமணியன், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு, குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.