அதிராம்பட்டினம், டிச.31
சைக்கிளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய இளைஞருக்கு பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் காதர் முகைதீன். இவரது மகன் தப்லே ஆலம் (வயது 30). விரைவாக சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை அதிராம்பட்டினத்தில் இருந்து திருச்சி, சிதம்பரம், மயிலாடுதுறை, சேத்தியாத்தோப்பு, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று திரும்பியுள்ளார். இதுவரையில், 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், இவரது சாதனையைப் பாராட்டி பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிரை பேரூர் தலைவர் என். முகமது புஹாரி, இன்று (டிச.31) திங்கட்கிழமை சான்றிதழ், நினைவுப்பரிசு, சீருடை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். அருகில் அவ்வமைப்பின் அதிரை பேரூர் செயற்குழு உறுப்பினர் ஏ.ஜெ முகமது அசார், உறுப்பினர் சம்சுல் ரஹ்மான் உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.