.

Pages

Tuesday, December 25, 2018

ஓமனில் புனித அல்குர்ஆன் போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கல் (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச. 25
ஓமன் நாடு தழுவிய அளவில் இந்த ஆண்டு 28வது சுல்தான் அல் கப்பூஸ் புனித குர்ஆன் போட்டியில் மொத்தம் 2,030 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களிலிருந்து 49 பேர் மட்டும் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு 8 பேர் கொண்ட குழுக்களாகவும், ஒரேயொரு குழு மட்டும் 9 பேருடனும் தேர்வு செய்யப்பட்டு இறுதிச்சுற்றுப் போட்டிகள் நடத்தப்பெற்றன.

இந்த வருட புனித குர்ஆன் போட்டியின் சிறப்பம்சமாக, சுமைல் பிரதேச மத்திய சிறையிலிருந்து 2 சிறைவாசிகள் முழுக்குர்ஆனையும் தஜ்வீதுடன் மனனம் செய்து ஒப்புவிக்கும் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இவர்களுடன் காது கேளாத, பார்வை குறைபாடுடைய, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி போட்டியாளர்களும் ஆரம்பக்கட்ட போட்டிகளில் பங்குபெற்றிருந்தனர்.

இன்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா அல் பவ்ஷரில் உள்ள சுல்தான் அல் கப்பூஸ் பெரிய பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் போட்டியாளர்கள் சில தங்களின் திறமையை மேடையில் நிரூபித்தனர். வெற்றியாளர்களுடன் இந்த போட்டியின் மிக இளம் வயது போட்டியாளர் மற்றும் மிக முதிய வயது போட்டியாளர்களும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Source: Times of Oman
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.