.

Pages

Wednesday, December 26, 2018

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விஏஓக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பேராவூரணி டிச.26-
பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை-பேராவூரணி பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி வட்டாரத் தலைவர் ஆர்.ரத்தினவேல் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வட்டாரத் தலைவர் மகரஜோதி முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ராஜசேகரன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். வட்டச்செயலாளர் சக்திவேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். வட்டப் பொருளாளர் மருததுரை நன்றி கூறினார்.

பட்டுக்கோட்டை வட்டப் பொருளாளர் நாக மாணிக்கராஜ், பட்டுக்கோட்டை கோட்டப் பொறுப்பாளர் செந்தில்குமார், மஞ்சுளா, வெண்ணிலா, ஜெயதுரை, செல்வம், முத்துக்கிருஷ்ணன், மணிகண்டன், மௌனதுரை, நாகேந்திரன், ராஜமாணிக்கம், தனவேல் மற்றும் 15 பெண்கள் உள்ளிட்ட 75 கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில், '' பெண் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தில் மின்வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மென்பொருள் வசதி கொண்ட  கணினி மற்றும் இணையதள வசதி செய்து தர வேண்டும்.

ஒரே கிராம நிர்வாக அலுவலர் பல கிராமங்களை கூடுதலாக கவனிக்கும் நிலை உள்ளது. எனவே காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணி இடங்களை நிரப்ப வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் பெற்ற பின்னரே, பட்டா மாறுதல் செய்யவேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.