.

Pages

Thursday, December 27, 2018

நிவாரணம் வழங்கக்கோரி கரையூர்தெரு கிராம மக்கள் சாலை மறியல் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.27
அதிராம்பட்டினம் கரையூர்தெரு கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர்தெரு கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக நிவாரணம் வழங்காமல் பாரப்பட்சம் காட்டப்படுவதாகவும், ஒரு சிலருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், இதுகுறித்து முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் மறியலில் ஈடுபட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இப்போராட்டம் காரணமாக அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர்தெரு கிராமத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த மாதம் வீசிய கஜா புயலில் பெரும்பாலன வீடுகள் சேதமடைந்தது. கடல் நீரும் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்தது. மீன்பிடி படகுகள், வலைகள் சேதமடைந்தன. இதனால் தொழில்கள் முடங்கி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக நிவாரணம் வழங்காமல் பாரப்பட்சம் காட்டப்படுகிறது. அரசு அறிவித்த நிவாரணம் எங்களுக்கு இதுவரையில் வந்து சேரவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக நிவாரணம் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், எங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.