பேராவூரணி டிச.17-
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயத்தை மறுசீரமைப்பு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை விநாயகா திருமண மஹாலில் ஏசிஇ டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டு அடுத்து என்ன செய்வது, என்பது தெரியாமல் மனமுடைந்து நிற்கும் தென்னை விவசாயிகளின் அச்சத்தை போக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உளவியல் ரீதியாகவும்,அறிவியல் பூர்வமாகவும் ஆலோசனை வழங்குவதற்காகவும் நடைபெற்ற
இக்கூட்டத்திற்கு ஏசிஇ டிரஸ்ட் பொருளாளர் ஏ.மெய்ஞானமூர்த்தி
தலைமை வகித்தார். இ.வீ.காந்தி வரவேற்றார்.
தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாநிலத்தலைவர் டி.எஸ்.பிரபுராஜா சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ''இந்தியாவில் 65 சதவீதம் விவசாயிகள் உள்ளோம். 40 வருடங்களுக்கு முன்பு விவசாயிகள் வலிமையோடு இருந்தோம். அந்த வலிமை இன்று இல்லை. காரணம் விவசாயிகளிடம் அன்று இருந்த ஒற்றுமை இன்று இல்லை. விவசாயிகள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக் கொள்ள வேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டு, விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை அரசே அகற்றித் தரவேண்டும். நாங்களும் எங்களுடைய அமைப்பு சார்பில், தன்னார்வலர்கள் மூலம் தென்னை மரங்களை அகற்றித்தர உள்ளோம்.
மத்திய, மாநில அரசுகள் தரும் நிவாரணம் நம்முடைய இழப்பை ஈடு செய்யாது. இழப்பீடு எப்போது கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. எனவே விவசாயிகள் அதை நம்பிக் கொண்டிருக்காமல், அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும்.
உற்பத்தியை அதிகரிக்காமல், தேங்காய்க்கு அதிக விலை கிடைக்க வழி செய்ய வேண்டும். தென்னை பாதிப்பு குறித்து மத்திய மாநில அரசுகளை சந்தித்து பேச தயாராக உள்ளேன். விவசாயிகளுக்கு கட்சி முக்கியமில்லை. விவசாயிகள் அனைவரும் ஒரே கட்சியாக ஒருங்கிணைந்து நாம் போராடினால், நமக்கான உரிமையை நாம் பெறலாம்" இவ்வாறு பேசினார்.
ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.மோகன்தாஸ், எம்.சரவணன், யு.வேலுச்சாமி, கே.ஆர்.கோவிந்தராசு ஆகியோர் பேசினர். நிறைவாக ஓய்வுபெற்ற டிஎஸ்பி கே.மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் ஏசிஇ டிரஸ்ட் தலைவர் ஆவணம் அடைக்கலம், செயலாளர் எஸ்.நாகராஜன், இ.வீ.ஏகாம்பரம், இ.வீ.சந்திரமோகன், எஸ்.வைரவன், கே.கே.டி.சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், நெடுவாசல் கோவிந்தசாமி, மல்லிகை முத்துராமலிங்கம், தென்னங்குடி சீனிவாசன், ஒப்பந்ததாரர்கள் இரா.வேலுச்சாமி, ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.