.

Pages

Thursday, December 27, 2018

துபையில் ஜன.1 விடுமுறையையொட்டி இலவச பார்க்கிங் மற்றும் போக்குவரத்து மாறுதல்கள்!

அதிரை நியூஸ்: டிச.27
துபையில் ஜனவரி 1 அன்று கிருஸ்தவ புதுவருடப் பிறப்பு விடுமுறை தினத்தையொட்டி இலவச பார்க்கிங் மற்றும் போக்குவரத்து மாறுதல்கள் பற்றிய விவரங்கள்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை (2019 Jan 1) அன்று கிருஸ்தவர்களின் பண்டிகைகளில் ஒன்றான ஆங்கில வருடப்பிறப்பு நாள் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த வருடப் பிறப்பிற்கு அமீரகத்திலும் அரசு மற்றும் தனியார் துறையினருக்கும் ஒன்றுபோல் பொது விடுமுறை வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.

பார்க்கிங்:
மல்டிலெவல் பார்க்கிங் எனப்படும் அடுக்குமாடி பார்க்கிங் தவிர்த்த ஏனைய அனைத்து பார்க்கிங் பகுதிகளும் ஜனவரி 1 அன்று இலவசமே.

வாடிக்கையாளர் சேவை மையங்கள்:
துபையில் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் என அழைக்கப்படும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் டிச. 31 திங்கள் மற்றும் ஜன. 1 செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் அடைக்கப்பட்டிருக்கும். எனினும் உம்மு ரமூல், துபை போக்குவரத்து துறையின் (RTA) தலைமையகம் ஆகிய 2 அலுவலகங்கள் மட்டும் வழமைபோல் 24 மணிநேரமும் இயங்கும். அதேவேளை ஏனைய அனைத்து சேவை மையங்கள், வாகனப் பரிசோதனை மையங்கள் மற்றும் வாகனப் பதிவு மையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும்.

துபை மெட்ரோ:
ரெட் லைன் - டிச. 31 அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை (ஜனவரி 1 பிறக்கும் நேரம் வரை) இயங்கும்.

கிரீன்; லைன் - டிச. 31 அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை (ஜனவரி 1 பிறக்கும் நேரம் வரை) இயங்கும்.

மெட்ரோ பீடர் பஸ்கள்: (ராஷிதியா, மால் ஆப் எமிரேட்ஸ், இப்னு பதூதா, புரூஜ் கலீபா, அபூஹைல் மற்றும் எத்திஸலாத் பஸ் நிலையங்களிலிருந்து) டிச. 31 அதிகாலை 5 மணிமுதல் ஜன. 1 நள்ளிரவு 12.10 வரை இயங்கும்.

துபை டிராம்:
டிச.31 அதிகாலை 6 மணிமுதல் ஜன. 2 அதிகாலை 1 மணிவரை (அதாவது ஜன. 1 நள்ளிரவு)

பஸ் போக்குவரத்து:
கோல்டு சூக் - ஜன. 1 அதிகாலை 4.25 மணிமுதல் நள்ளிரவு 12.29 மணிவரை (ஜன. 2 அதிகாலை) இயங்கும்.

அல் குபைபா (பர்துபை) - ஜன. 1 அதிகாலை 4.14 மணிமுதல் நள்ளிரவு 12.33 மணிவரை (ஜன. 2 அதிகாலை) இயங்கும்.

இன்டர்சிட்டி பஸ்கள்:
பர்துபை - ஷார்ஜா (அல் ஜூபைல் பஸ் நிலையம்) இடையே 24 மணிநேரமும் தொடர்ந்து இயங்கும்.

துபை – அபுதாபி இடையே ஜன.1 அதிகாலை 4.36 மணிமுதல் நள்ளிரவு 12.01 (ஜன.2 அதிகாலை) வரை இயங்கும்.

நீர் போக்குவரத்து:
வாட்டர் பஸ், பெர்ரி, அப்ரா போன்றவை இயங்கும் நேரம் குறித்து அறிந்திட 800 9090 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது rta.ae என்ற இணையதளத்திற்குள் சென்று தெரிந்து கொள்ளவும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.