அதிராம்பட்டினம், டிச.17
காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர் விஞ்ஞானிகள் திட்ட முகாம் டிச.20ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெறும் இளம் மாணவர்கள் விஞ்ஞானிகள் திட்ட முகாமில் பங்கேற்க 9 ஆம் வகுப்பு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இளம் மாணவர்கள் விஞ்ஞானிகள் திட்ட முகாம் வருகிற 24 ம் தேதி தொடங்கி 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது. தமிழக அரசின் அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் சார்பில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் துறையில் மேம்பாடு அடைவதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெறும் முகாமில் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 80 மாணவ, மாணவிகள் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
இந்த திட்டமுகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளியில் விண்ணப்பத்தை பெற்று வருகிற 20 ஆம் தேதிக்குள், முதல்வர், காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம் - 614701 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலதிக தகவலுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் பி.குமாரசாமி, கே.முத்துக்குமரவேல் ஆகியோரை 9443863020 / 9791387363 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.