.

Pages

Sunday, December 16, 2018

இந்தியர்களுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க மத்திய அமைச்சர் கோரிக்கை!

அதிரை நியூஸ்: டிச.16
கடந்த ஹஜ் யாத்திரையை இந்தியாவிலிருந்து சுமார் 170,000 பேர் நிறைவேற்றியுள்ளனர், இவர்களில் தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்கள் மூலம் வருகை தந்த 45,000 பேரும் அடக்கம். எதிர்வரும் ஹஜ் கிரிகைகளை நிறைவேற்ற தற்போது வரை சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர், டிசம்பர் 19 வரை விண்ணப்பத் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 170,000 பேர் ஹஜ் செய்துள்ளதையடுத்து மேலும் 20,000 பேருக்கு கோட்டாவை அதிகரித்து அனுமதி வழங்கிட வேண்டும் என சவுதி ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும், இந்த கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும் என நம்புவதாகவும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாhஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு சவுதி அரசு அறிமுகம் செய்து இந்தோனேஷியாவில் பரிட்சீத்துப்பார்த்த 'மக்கா ரோடு' என்ற திட்டத்தில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது. இத்திட்டத்தின்படி சவுதி இமிக்கிரேசன் பணிகளில் பெரும்பாலனவை இந்திய விமான நிலையங்களிலேயே நடத்தி முடிக்கப்படும்.

2020 ஆம் ஆண்டு முதல் கப்பல் மூலம் ஹஜ் செய்திட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், இதற்காக பன்னாட்டு கப்பல் போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து டென்டர்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார், கடந்த ஆண்டு பெற்ற டென்டர் காலாவதியாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

பெண் ஹஜ் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 40 சதவிகிதமாக இருந்தநிலையில் இந்த ஆண்டு 47 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.கடந்த ஆண்டு மகரம் தேவையில்லாத பெண்கள் சுமார் 1,300 பேர் தனியே ஹஜ் செய்துள்ள நிலையில் இந்த ஆண்டு 2,000 பேருக்கு மேல் அதிகரிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். இப்பேட்டியின் போது சவுதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.