.

Pages

Tuesday, December 25, 2018

49 ஆண்டுகளில் ஒருமுறை கூட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத ஓட்டுனர் கெளரவிப்பு!

அதிரை நியூஸ்: டிச.25
49 ஆண்டுகளில் ஒருமுறை கூட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத இமராத்தி டிரைவர் ராஸ் அல் கைமாவில் கவுரவிப்பு

அமீரகம், ராஸ் அல் கைமாவைச் சேர்ந்த 78 வயது இமராத்தி பெரியவர் சயீத் ராஷித் அஹ்மது பெல்ஹோன், இவர் கடந்த 1969 ஆம் ஆண்டு தனது ராஸ் அல் கைமா (அமீரக) டிரைவிங் லைசென்ஸை பெற்றார். அமீரக லைசென்ஸிற்கு முன்பாகவே குவைத் நாட்டு டிரைவிங் லைசென்ஸையும் பெற்றுள்ளார்.

பெரியவர் சயீத் ராஷித் அவர்கள் லைசென்ஸ் பெற்று 49 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் ஒருமுறை கூட அவர் சாலை விதிகளை மீறியதோ, தண்டனை பெற்றதோ கிடையாது. தான் எப்போதும் போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்ததோ அல்லது மீறல் நடந்து கொண்டதை விரும்பியதும் இல்லை, அவ்வாறு நடந்து கொண்டதும் இல்லை என தெரிவிக்கின்றார்.

அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் சிறந்ததொரு முன்மாதிரியாக திகழும் சயீத் ராஷித் அஹ்மது பெல்ஹோல் அவர்களுக்கு சிறப்பு பாராட்டுப் பத்திரத்தை (விருது) வழங்கி கவுரவித்துள்ளது ராஸ் அல் கைமா காவல்துறை தலைமையகம்.

(Director general of the central operations room, described Belhoun as “the ideal driver who abided the traffic rules and regulations at all times”).

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.