.

Pages

Friday, December 28, 2018

அதிரை அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்திய CBD அமைப்பினர்!

அதிராம்பட்டினம், டிச.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள வள்ளிக்கொல்லைகாடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி அபூர்வம் அம்மையார் (வயது 68). கஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக இவர் வசித்து வந்த கூரை வீடு முற்றிலும் சேதமடைந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, உடல்நலம் பாதிப்படைந்து, அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். இதையடுத்து இவரது மகள் செல்வி தனது தாயின் இறுதிச்சடங்கு நடத்த முன்வருமாறு கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) என்ற இரத்ததான கொடையாளர்கள் அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் தலைமையில், அவ்வமைப்பைச் சேர்ந்த சமீர் அலி, ஆரிப், சாகுல் ஹமீது, சிராஜ், ஹாஜா, பேராவூரணி கனகராஜ் உள்ளிட்டோர் அபூர்வம் அம்மையாரின் உடலை சுத்தம் செய்து வள்ளிக்கொல்லை சுடுகாட்டுக்கு அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்று இறுதிச்சடங்கை நடத்தினர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் கூறியது;
புயலில் பாதிப்படைந்த அபூர்வம் அம்மையார் வசித்து வந்த வீட்டை புனரமைத்து கொடுக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், ஆம்புலன்ஸ் வழங்கி உதவிய அதிரை பைத்துல்மால் சேவை அமைப்புக்கு நன்றி. நாங்கள் இதை பப்ளிசிட்டிக்காக செய்யவில்லை. பாதிக்கப்பட்டவரின் சாதி, மதம் கடந்து நாங்கள் உதவுவதற்காக முன்வந்தோம். இறந்தவர் யாராக இருந்தாலும் அவரது இறுதிச்சடங்கு முழுமையாக நடக்கவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். என தெரிவித்தார்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.