.

Pages

Tuesday, December 25, 2018

ராஸ் அல் கைமாவில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 3,800 பேர் பங்கேற்பு!

அதிரை நியூஸ்: டிச.25
அமீரகம், ராஸ் அல் கைமா நகரின் நியூ இந்தியன் ஸ்கூல் வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இலவச மருத்துவ சிகிச்சை முகாமில் சுமார் 3,800 பேர் பங்குபெற்று பயனடைந்தனர். இவர்களில் 75 சதவிகிதம் ஆண்கள், 25 சதவிகிதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என இதை துபை இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து ஒருங்கிணைத்த இந்தியன் ரிலீஃப் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த முகாமில் 20 பொது மருத்துவர்கள், 30 சிறப்பு மருத்துவர்கள், 20 மருத்துவ ஆலோசகர் மற்றும் 150 மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்தனர். மருத்துவ சிகிச்சை பெற்றவர்களுக்கான மருந்து மாத்திரைகளை இலவசமாக 20 மருந்துக்கடைகள் இணைந்து வழங்கின.

இந்த மருத்துவ முகாமை இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டின் கீழ் ராஸ் அல் கைமா எமிரேட்டின் சுகாதார அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பொதுப்பணித் துறை, அனைத்து கேரள மருத்துவ பட்டதாரிகள் சங்கம், ராக் ஹாஸ்பிட்டல், ஜூல்பார் பார்மசூட்டிக்கல் கம்பெனி ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இந்த மருத்துவ முகாமில் பயனடைந்தவர்களின் விபரங்கள் வருமாறு:
Lipid profile tests for 1,800 patients, ultrasound for 65, ECG for 176, bone mineral density for 350, dental care for more than 500, breast cancer screening for 75, oral screening for mouth cancer for 65, health education for 169, eye test for 300, and BP glucose test for all.

The head of the breast clinic from the Saqr Hospital led the breast screening for females. Mammography was also available on the premises with the support of Pink Caravan

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.