அதிரை நியூஸ்: டிச.18
துபையில் நடப்பு 2018 ஆம் வருடத்தில் 1000க்கு மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் பிடிபட்டுள்ளன
துபை விமான நிலையங்களில் நடப்பு 2018 ஆம் வருடத்தில் மட்டும் பல நாடுகளையும் சேர்ந்த சுமார் 1,043 போலி பாஸ்போர்ட்டுகள் நவீன தொழில்நுட்ப சோதனைகளில் பிடிபட்டுள்ளன. மேலும் பல வெளிநாட்டு போலி டிரைவிங் லைசென்ஸூகள் மற்றும் ரெஸிடென்ஸி அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக துபை விமான நிலைய இமிக்கிரேசன் துறை அறிவித்துள்ளது.
அதேபோல் பிற மேற்கத்திய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக துபை விமான நிலையம் வழியாக டிரான்ஸிட் பயணிகளாக செல்லும் பலர் கையில் 'அந்தந்த நாடுகளுக்குள்' நுழைவதற்கான விசிட் விசாக்கள் போன்ற ஆவணங்கள் இல்லாது அல்லது போலியான ஆவணங்களுடன் வந்த பலரும் பிடித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
துபை விமான நிலையங்களில் சுமார் 1,700 இமிக்கிரேசன் அதிகாரிகள் 'retro-check' எனப்படும் நவீன கருவியை கொண்டு பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை சோதித்து வருகின்றனர். ஒரு சில பாஸ்போர்ட்டுகளில் பக்கங்கள் மாற்றப்பட்டும், போட்டோ மாற்றப்பட்டு பயணம் செய்த நிலையில் பிடிபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.