அதிரை நியூஸ்: டிச.30
ராஸ் அல் கைமா எமிரேட்டில் உள்ள ஜெபல் அல் ஜைஸ் மலைச்சிகரமே அமீரகத்தின் மிக உயரமான மலைச்சிகரமாகும். இதன் உயரம் 1,934 மீட்டர் என்பதுடன் இந்த மலைச்சிகரம் ஓர் சுற்றுலா பிரதேசமாகவும் விளங்குகின்றது. இதன் மலையுச்சி ஒன்றில் உலகிலேயே மிக உயரத்தில் அதாவது 1,680 மீட்டர் உயரத்தில் 2.8 கி.மீ தூரத்திற்கு ஜிப்லைன் (Zipline) எனப்படும் இரும்புக்கம்பி வடத்தில் சறுக்கியவாறு தொங்கிச் செல்லும் சாகச விளையாட்டு மையமும் உள்ளது. உயரத்தை ஒப்பீட்டுச் சொல்லதென்றால் 828 மீட்டரில் துபையில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புரூஜ் கலீஃபாவை விட இருமடங்கு உயரம் கொண்டதாகும்.
நேற்று மாலை ஜெபல் அல் ஜைஸ் மலைச்சிகரத்திற்கு அருகிலுள்ள மற்றொரு சிகரத்திற்கு மலைச்சாகசம் சென்ற இந்தியர் ஒருவர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வந்ததை அடுத்து 3 இமராத்திகள் (அமீரகத்தினர்) 1 வெளிநாட்டுக்காரர் உள்ளிட்ட 4 மருத்துவ மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் ஒன்றில் விரைந்து சென்றனர். இவ்வாறு விபத்தில் சிக்குவோரை மீட்கச்செல்வது இங்கு வழமையாக நடைபெறும் ஒன்றே.
நேற்று மாலை சுமார் 5.50 மணியளவில் மீட்புப்பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் எதிர்பாராவிதமாக 'ஜிப்லைனில்' சிக்கி விழுந்து நொறுங்கி தீப்பற்றியதை அடுத்து ஹெலிகாப்டரில் பயணம் செய்த நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர், இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். விபத்தில் சிக்கிய 3 இமராத்திகள் மற்றும் 1 வெளிநாட்டுப் பிரஜை குறித்த மேலதிகத் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.