.

Pages

Wednesday, December 26, 2018

சவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது விதிக்கப்பட்ட வரி மறுபரிசீலணை: அமைச்சர் தகவல்!

அதிரை நியூஸ்: டிச.26
சவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி மறுபரிசீலணை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல்

சவுதியில் கடந்த வருடம் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தியிருக்கும் நிறுவனங்கள் தங்களின் வெளிநாட்டு ஊழியர்கள் ஒவ்வொருவரின் பேரிலும் மாதந்தோறும் 400 ரியால்களை வரியாக (Expat levy) கட்ட வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியது.

இந்த சட்டம் குறித்து கடந்தகால அனுபவத்தின் அடிப்படையில் மறுபரிசீலணை செய்யப்பட்டு வருவதாகவும் இதன் முடிவுகள் மந்திரிசபைக் கூட்டத்தில் மேலாய்வுக்காக சமர்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்  முடிவுகள் அறிவிக்கப்படும் என வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான அமைச்சர் மாஜித் அல் கஸ்ஸாபி அவர்கள் தெரிவித்துள்ளார். எனினும் எந்த முடிவும் நாட்டின் நலநன முன்னிட்டே மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த வாரம் சவுதி அரேபியா அரசு சமர்ப்பித்த பட்ஜெட் கூட்டத்திற்குப் பின் பேசிய நிதி அமைச்சர் முஹமது அல் ஜதான், வெளிநாட்டு ஊழியர்கள் மீதான வரியை நீக்குவதற்கான எண்ணம் ஏதுமில்லை என அறிவித்திருந்தார்.

மேலும் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல்களுக்கான அமைச்சர் முஹமது அல் துவைஜிரி, வெளிநாட்டு ஊழியர் மீது விதிக்கப்பட்டு வரும் வரியை நீக்க திட்டம் ஏதுமில்லை என்றாலும் பொருளாதார சூழல்களை முன்னிட்டு எழும் தேவைகள் கருத்திற் கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

குறிப்பிட்ட துறைகள் அல்லது குறிப்பிட்ட தொழிற்சாலைகளில் மட்டும் பணம் கொடுக்கல் வாங்கல்களில் சமநிலையை மேற்கொள்ளவும், சவுதியர்களுக்கான புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கித் தரும் விதத்திலும் மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மீதான வரி 400 ரியால்களாகும், சரிசமமான அல்லது மேற்பட்ட எண்ணிக்கையில் சவுதியர்களை பணியிலமர்த்தியிருக்கும் நிறுவனங்கள் 300 ரியால்களும் செலுத்தி வருகின்றன. இதுவே 2019 ஆம் ஆண்டில் 600க்கு 500 என்றும், 2020 ஆம் ஆண்டில் 800க்கு 700 எனவும் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.