.

Pages

Wednesday, December 26, 2018

துபையில் 24-வது ஷாப்பிங் திருவிழா தொடக்கம்!

அதிரை நியூஸ்: டிச.26
துபையில் வருடந்தோறும் குளிர்காலத்தை கணக்கிட்டு துபை ஷாப்பிங் பெஸ்டிவல் (Dubai Shopping Festival - DSF) என்கிற விற்பனை திருவிழா நடைபெறும். இன்று டிச. 26 துவங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி வரை சுமார் 5 வார காலத்திற்கு நடைபெறவுள்ள இந்த வருட விற்பனைத் திருவிழாவில் துபை முழுவதுமுள்ள சுமார் 3,200 வர்த்தக நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன.

துபை ஷாப்பிங் பெஸ்டிவல் துவக்கத்தை குறிக்கும் வகையில் இன்று பகல் 12 முதல் இரவு 12 மணிவரை பல்வேறு மால்களில் செயல்படும் பிரண்டட் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் 90 சதவிகிதம் வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனை செய்யவுள்ளன.

குறிப்பாக, துபை ஷாப்பிங் பெஸ்டிவலில் அங்கத்தினர்களாக பங்குபெற்றுள்ள 300 நகைக்கடைகளிலிருந்து குறைந்தது 500 திர்ஹத்திற்கு தங்கம் அல்லது வைர நகைகள் வாங்குவோருக்கு பரிசு கூப்பன் ஒன்று தரப்படும். இந்த கூப்பன்கள் தினமும் குலுக்கப்பட்டு தினமும் 1 கிலோ தங்கம் என்ற அடிப்படையில் மொத்தம் 32 கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடம்பரக் கார்கள், டிவிக்கள் என மொத்தம் 8.5 மில்லியன் திர்ஹம் அளவிற்கான பரிசுகளும் காத்திருக்கின்றன.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.