ஆண்டுதோறும் உலகளாவில் சுமார் 92 மில்லியன் டன் பழைய துணிகள் மக்களாலும், துணி ஆலைகளாலும் களைந்து எறியப்படுகின்றன. இதில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 10 மில்லியன் டன் துணிகள் குப்பையாகின்றன. இந்த பழைய துணிகளே உலகின் 2வது மிகப்பெரும் கழிவுப்பொருட்களாக உள்ளன. இந்த துணிக்குப்பைகளே உலகின் சுற்றுச்சூழலை பாதிக்கும் சுமார் 10 சதவிகிதம் கரியமில வாயுவை வெளியாக்குகின்றன.
இந்த துணிகளை கட்டிட கட்டுமானங்களின் மாற்றுப்பொருட்களாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை வீணா சஹஜ்வல்லா. இவர் ஆஸ்திரேலியா, சிட்னி நகரிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவர் மும்பையில் பிறந்து கான்பூர் ஐஐடியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய துணிகளிலிருந்து ஜிப், பட்டன், கொக்கி போன்ற பொருட்களை அகற்றிவிட்டு பருத்தி, பாலியஸ்டர், நைலான் போன்ற அனைத்துவகை துணிகளையும் கலந்து நன்கு துகள் துகள்களாக அறைத்து அவற்றுடன் சில ரசாயனங்களை நாம் தயாரிக்க விரும்பும் பொருட்களின் தேவைக்கு ஏற்ப சேர்ப்பதன் மூலம் சூடுபடுத்தி இறுதியாக அச்சுக்களில் அழுத்தி இறுகவைத்து பல வண்ணங்களில் உத்திரம், மரச்சட்டம், அழகு கற்கள், தரைகளுக்கான டைல்ஸ், நிலைக்கதவுகள், வீட்டின் உட்புற வேலைப்பாடுகளுக்கான பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கலாம்.
மேலும் இந்த பழைய துணி கூழுடன் பழைய மெத்தை (படுக்கை), மரத்தூள் போன்றவற்றையும் கலந்தும் மேற்காணும் பொருட்களை உருவாக்கலாம். இந்த பழைய துணியிலிருந்து தயாரிக்கப்படும் கட்டுமானப் பொருட்கள் சூட்டையும் குளிரையும் தாங்குவனவாகவும், நீர் உட்புகாதவகையாகவும், குறைந்தளவே தீப்பற்றும் தன்மையுடையதாகவும் உள்ளன என புதுடெல்லியில் நடைபெற்ற 'வளர்ந்து வரும் புதிய கட்டிட தொழில்நுட்பங்கள்' எனும் கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
Good.. Think different.. Saving environment..
ReplyDelete