.

Pages

Friday, December 28, 2018

விடுபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

பேராவூரணி டிச.28-
கஜா புயலில் பாதிக்கப்பட்டு விடுபட்ட மக்களுக்கும், பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரக் குழு, ஏஐடியுசி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் எம்.சித்திரவேலு,
வி.ஜி.பாலு ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்கம் வி.ராஜமாணிக்கம், ஏஐடியுசி பொறுப்பாளர் கே.எஸ்.முருகேசன், மாதர் சங்கம் வி.சிவகாமி, சிபிஐ நகர துணைச் செயலாளர்
கே.சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் பா.பாலசுந்தரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழக மக்கள் புரட்சிக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு.நீலகண்டன் வாழ்த்திப் பேசினார். சிபிஐ ஒன்றிய செயலாளர் டி.பன்னீர்செல்வம் போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிவாரணம் கேட்டு விடுபட்டு, மீண்டும் மனு அளித்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை நேரில் சென்று விசாரித்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். பட்டியலில் பெயர் உள்ள தகுதியான அனைவருக்கும் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தலித் மற்றும் ஏழை மக்களுக்கு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழு மக்களை பணம் கட்டச் சொல்லி தனியார் நிதி நிறுவனங்கள் வற்புறுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ப.காசிநாதன், ஜெயராஜ், சின்னத்தம்பி, சம்பத், சையது முகமது கனி, பாரதி வை.நடராஜன், வி.கோபால், எஸ்.கே.எம்.காசியார், எம்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வி.என். அமரேந்திரன், ரவி, கருணாமூர்த்தி, எம்.வேலுச்சாமி, வி.சந்திரன்  மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட நிறைவில் பேராவூரணி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.