.

Pages

Tuesday, December 25, 2018

புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும் பணி: ஆட்சியர் மேலாய்வு (படங்கள்)

பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும் பணியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை மேலாய்வு செய்தார்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும் பணியினை  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (25.12.2018) நேரில் பார்வையிட்டு மேலாய்வு செய்தார்.

பேராவூரணி ஒன்றியம், ஆதனூர் ஊராட்சி, சேதுபாவாசத்திரம், திருவோணம் ஒன்றியம், வெண்கரை ஊராட்சி, பெரியக்கோட்டை ஊராட்சி ஆகிய பகுதிகளில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை கணக்கிடும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மேலாய்வு செய்தார்.  சேதுபாவாசத்திரத்தில் கஜா புயலால் சேதமடைந்த படகுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.  தொடர்ந்து, துறையூர் ஆதிதிராவிடர் காலனியில் அரசால் வழங்கப்பட்ட கஜா புயல் நிவாரண பெறப்பட்டுள்ளதா என்பதையும், கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் கேட்டறிந்தார். நிவாரணத் தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு கூடிய விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

பின்னர், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகங்களில் கஜா புயலால் பாதிப்படைந்த குடியிருப்புகள், கால்நடைகள், தென்னை, பயிர் ஆகிய பாதிப்புகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து கேட்டறிந்தார். நிவாரணப் பணிகள் விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இவ்வாய்வின் போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முருகானந்தம், தனித்துணை ஆட்சியர் மணிவண்ணன், பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சாந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.