.

Pages

Wednesday, December 26, 2018

துபைவாழ் வெளிநாட்டினருக்கு இன்ஷூரன்ஸ் மூலம் கேன்சருக்கு முழு சிகிச்சை!

அதிரை நியூஸ்: டிச.26
ஜன. 1 முதல் துபைவாழ் வெளிநாட்டினருக்கும் இன்ஷூரன்ஸ் மூலம் கேன்சருக்கு முழு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் துபையில் Essential Benefit Plan (EBP) என்ற அடிப்படை இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்துள்ள துபைவாழ் வெளிநாட்டினர் அனைவருக்கும் 3 வகையான கேன்சர் மற்றும் கல்லீரல் அழற்சி நோய்களுக்கும் முழுமையான சிகிச்சை வழங்கப்படும் என துபை சுகாதார ஆணையம் (DHA) தெரிவித்துள்ளது.

(Dubai-based expats with the basic insurance package will get unlimited coverage for three types of cancer treatment and Hepatitis C from January 2019)

இப்புதிய திட்டத்தின் கீழ் கர்ப்பப்பை வாய், பெருங்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய், ஹெபாடிடீஸ் சி எனப்படும் கல்லீரல் சி வைரஸ் அழற்சிநோய் ஆகியவற்றிற்கான முழு மருத்துவச் செலவையும் ஏற்று அடிப்படை இன்ஷூரன்ஸ் திட்டத்திலேயே சிகிச்சையளிக்கப்படும்.

(Patients with cervical, colorectal and breast cancer, Hepatitis C and lung cancer with some free-of-cost initiatives)

அடிப்படை இன்ஷூரன்ஸ் திட்டம் என்பது 550 திர்ஹம் செலுத்தி வாங்கப்படுவதாகும். இதன் மூலம் 150,000 திர்ஹம் வரையிலான மருத்துவ செலவுகளை ஈடுசெய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது என்றாலும் மேற்குறிப்பிட்ட 3 வகையான கேன்சர் மற்றும் ஹெபாடிடீஸ் சி ஆகிய நோய்களுக்கான செலவினங்களுக்கு மட்டும் தொகை உச்சவரம்பு கிடையாது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.