.

Pages

Monday, December 17, 2018

மறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஜாயித் போல் தோற்றமளிக்கும் இளைஞர்!

அதிரை நியூஸ்: டிச.17
மறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஜாயித் போல் தோற்றமளிக்கும் ஷார்ஜா இமராத்தி இளைஞர்

34 வயதுடைய ஷார்ஜா இமராத்தி இளைஞர் 'ஹஸ்ஸா ஸயீத் அப்துல்லா அல் கித்பி' மறைந்த அமீரக ஜனாதிபதியும், அபுதாபியின் ஆட்சியாளரும், அமீரகத்தின் தந்தை எனவும் போற்றப்படுபவருமான ஷேக் ஜாயித் பின் நஹ்யான் அவர்களின் தோற்றத்தில் காட்சியளிக்கின்றார், இந்த ஒற்றுமை இமராத்திகளையும், அமீரகவாழ் மக்களையும் பேராச்சரியப்படுத்தி வருகின்றது.

இமராத்தி என்ற உருவ ஒற்றுமையை தவிர மறைந்த ஷேக் ஜாயித் அவர்களுக்கும் ஹஸ்ஸா ஸயீத் அப்துல்லா அல் கித்பி அவர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்போ, உறவோ கிடையாது என்றாலும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஷேக் ஜாயித் அவர்கள் போல் தோற்றமளிப்பதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை தான் பதிவேற்றியதை தொடர்ந்து வந்த கமெண்ட்டுகள் வழியாக தெரிய வந்ததாக தெரிவிக்கின்றார்.

ஷேக் ஜாயித் போல் தோற்றமளிப்பதை தான் ஒருபோதும் சுய சம்பாத்தியத்திற்காக பயன்படுத்திக் கொண்டதில்லை என்று கூறும் ஹஸ்ஸா, பல்வேறு அமீரக கலாச்சார விழாக்களுக்கு உருவ ஒற்றுமையின் காரணமாக சிறப்பு அழைப்பாளராக சென்று வருகின்றார். இதன் மூலம் கிடைக்கும் அறிமுகங்களின் வழியாக அமீரக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், அனாதைகள், பள்ளிக்கூடங்கள் போன்றவைகளுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்கச் செய்கின்றார். இத்தனைக்கும் ஹஸ்ஸா அவர்கள் ஷார்ஜா ஆட்சியாளரின் பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவராகவே பணியாற்றி வருபவர்.

இவர் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்வு ஒன்று:
ஒருமுறை அல் அய்னில் 'அமீரக கொடி நாள்' தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஒரு இமராத்தி குடும்பத்தினரை சந்திக்க சென்றிருந்தார். குடும்பத்திலுள்ள அனைவரும் இவருடன் அன்புடன் அளவலாவிய நிலையில் ஒரு சிறுமி மட்டும் அருகே வராமல் சிறிது தூரத்திற்கு சென்று அழத்துவங்கிவிட்டாள். விசாரித்த போது தான் தெரிந்தது, ஷேக் ஜாயித் அவர்கள் இறந்துவிட்டார்கள் என சொல்லித்தரப்பட்டுள்ள நிலையில் நமது வீட்டிற்கு வந்துள்ள ஷேக் ஜாயித் யார்? என பயந்து போய் அழுதுள்ளாள். இறுதியாக அச்சிறுமிக்கு உண்மையை விளக்கிக் கூறியவுடன் பயம் அகன்று அருகே வந்துள்ளாள்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.