தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், இளம் அறிவியல் விஞ்ஞானிகள் திட்ட முகாம் காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் இன்று திங்கள்கிழமை காலை தொடங்கியது.
முகாமை கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடங்கி வைத்து பேசுகையில்;
கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டவும், ஆராய்ச்சியில் ஈடுபடுத்தும் வகையிலான இளம் அறிவியல் விஞ்ஞானிகள் உருவாக்கவும் இந்த முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், கணிதம், கணினி, இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் குறித்த பாடங்கள் நடத்தப்பட உள்ளன. இதில், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடுவர். புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்குவர். அறிவியல் ஆராய்ச்சி மையம், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று நேரில் விளக்கம் அளிக்கப்படும். முகாம் நிறைவில் மாணவர்கள் சுயமாக உருவாக்கும் பொருட்களைக் கொண்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்படும்' என்றார்.
புத்தகம் படித்து மதிப்பெண்கள் பெறுவதும் மட்டும் நம் வாழ்க்கையில் பயன்படாது. சிந்தனைத்திறனை வளர்த்துக்கொள்வதில் மாணவர்கள் அதிக ஆர்வம் கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய வகையில் உங்களது சிந்தனைத்திறனை அமைத்துக்கொள்ள வேண்டும். 15 நாட்கள் நடக்கும் இந்த முகாம் உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும்' என்றார்.
மேலும், மன்னார்குடி பின்ட்லே மேல்நிலைப்பள்ளித் தாளாளர் எம். ஜேம்ஸ் ரெல்டன், தஞ்சாவூர் அக்கு பஞ்சர் மருத்துவர் வி. கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முகாமில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முகாம் இன்று (டிச.24) திங்கட்கிழமை தொடங்கி வரும் ஜன.7 ந் தேதி வரை 15 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
முன்னதாக, திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி. குமாரசாமி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை திட்ட அமைப்பாளர் பேராசிரியர் அ. அம்சத் தொகுத்து வழங்கினார். முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. முத்துக்குமரவேல் நன்றி கூறினார்.
முகாமில், கல்லூரி துணை முதல்வர்கள் எம். நாசர், எம். முகமது முகைதீன், பேராசிரியர்கள் ஓ. சாதிக், ஏ. மஹாராஜன், ஜெ. சுகுமாரன், என். வசந்தி உட்பட கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி அறிவியல் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நல்லதே செய்ய நல்லதே நடக்கும்
ReplyDelete