.

Pages

Friday, December 28, 2018

அமீரகத்திலிருந்து தென் இந்தியாவுக்கான நேரடி ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தம்!

அதிரை நியூஸ்: டிச.28
அமீரகத்தின் விமான நிலையங்களிலிருந்து தென் இந்திய விமான நிலையங்களுக்கு இயக்கப்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து நேரடி சேவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

நடப்பிலுள்ள ஷார்ஜா - கொச்சி இடையே இடையான சேவைகள் எதிர்வரும் 2019 பிப்ரவரி 10 ஆம் தேதியுடன் முற்றிலும் நிறுத்தப்படுகின்றன.

முன்பதாக ஷார்ஜா - கொச்சி இடையே சேவைகள் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியுடனும், துபை - மங்களூர் இடையேயான சேவைகள் டிசம்பர் 5  ஆம் தேதியுடனும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனி தென் இந்திய நகரங்களுக்கான சேவைகள் மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்கள் வழியாக மட்டும் டிரான்ஸிட் / கனெக்டிங் அடிப்படையில் தொடர்ந்து இயக்கப்படும்.

தற்போது துபை - மும்பை இடையே தினமும் 7 விமான சேவைகளும், துபை - டெல்லி இடையே தினமும் 4 விமான சேவைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சேவைகளை அனுசரித்து தென் இந்தியாவுக்கு கூடுதல் உள்ளூர் விமான சேவைகள் அதிகரிக்கப்படும் என ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.